கருப்புத் தங்கம்

குப்பைகளை வீடு வீடாக சென்று எடுத்து வருகின்றனர்.

பெங்களூர் ஐ.டி நிறுவங்களுக்கு மட்டும் பெயர் போனதல்ல. இன்னும் சில காலத்தில் குப்பைகளுக்கும் சேர்த்து பெயர் வாங்கும். குப்பைகளை அரசாங்கம் சரியாக கையாளவில்லை என்றே நம்மில் பலரும் கூறி வருகிறோம். ஆனால் குப்பைகளை நம் வீட்டில் நாம் சரியாக கையாளுகிறோமா?. இல்லை என்று தான் கூற வேண்டும். நாம் என்ன செய்ய முடியும் குப்பைகளை என்று கேட்கிறீர்களா?. ஒரு குப்பை கூட நம் வீட்டை விட்டு செல்லாதவண்ணம் செய்ய முடியும் என்று National Games Village – Koramangala வை சேர்ந்த மீரா கூறுகிறார்.

National Games Village-ல் Tungabadra Block -ஐ சேர்ந்தவர் மீரா. அவருடைய ஆலோசனைப்படி வீட்டிலேயே நாம் நமது குப்பைகளை சீர் செய்து உரமாக்கலாம். முதலில் நமது குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

Daily Dump

Daily Dump


மீரா-வே தயாரித்த Daily Dump போன்ற மற்றுமொரு சாதனம்.

மீரா-வே தயாரித்த Daily Dump போன்ற மற்றுமொரு சாதனம்.


மக்கும் குப்பைகளை எல்லாம் Daily dump எனப்படும் மண் பாண்டங்களில் போட்டு வைக்க வேண்டும். மக்கும் குப்பை என்பது நம் வீட்டில் சமையற்கட்டில் விழும் குப்பைகளான காய்கறி தோல்கள் மற்றும் மீதம் ஆன சாப்பாடு அத்தனையும். நாளடைவில் Daily dump-ல் போட்ட குப்பைகள் மக்கி கருப்பு உரமாக மாறும். உரமாக மாறி விட்டது என்பதை, அந்த குப்பைகலில்ருந்து வரும் வாடையிலிருந்து கண்டுபிடிக்கலாம். நல்ல மண் வாடை வந்தால் குப்பைகள் உரமாகி விட்டன என்று அர்த்தம். இந்த உரத்தைத் தான் “கருப்புத் தங்கம்” என்று சொல்கின்றனர். மக்காத குப்பைகளில் விற்க முடிகிறவைகளை பக்கத்தில் உள்ள கடைகளில் விற்று விடலாம்.

அவர் தம் வீட்டில் மட்டுமல்லாமல் தான் குடியிருக்கும் Tungabadra Block முழுக்க இந்த மாதிரியான Zero Waste Mangement System எனப்படும் முறையில் குப்பைகளை வெளியில் செல்லாமல் தாங்களே கையாளுகின்றனர். அதற்கான வேலையில் அமர்த்தப்படும் வேலையாட்கள் அனைவருக்கும் மக்காத குப்பைகளை விற்று வரும் பணத்திலேயே சம்பளமும் கொடுக்கின்றனர்.

குப்பைகளை வீடு வீடாக சென்று எடுத்து வருகின்றனர்.

குப்பைகளை வீடு வீடாக சென்று எடுத்து வருகின்றனர்.


வேலையாட்கள் குப்பைகளை தனித் தனியாக பிரித்து எடுகின்றனர்.

வேலையாட்கள் குப்பைகளை தனித் தனியாக பிரித்து எடுகின்றனர்.


காய்ந்த இலைகள், மக்கும் குப்பைகளை உலர்வாக வைத்துக் கொள்ள...

காய்ந்த இலைகள், மக்கும் குப்பைகளை உலர்வாக வைத்துக் கொள்ள…


வீட்டில் செடிகளுக்கு உரமாக நாமே செய்யும் Compost....

வீட்டில் செடிகளுக்கு உரமாக நாமே செய்யும் Compost….

மீரா-வை போல் நாம் நம் தெரு முழுக்க செய்ய முடியவில்லை என்றாலும் கூட நம் வீட்டில் மட்டும் நாம் செயல் படுத்துவதைப்பற்றி யோசிக்கலாமே..
மீரா-வை பற்றி The Hindu பத்திரிக்கையில் http://www.thehindu.com/news/cities/bangalore/waste-segregation-hits-a-high-point-here/article2088217.ece

Daily dump பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://dailydump.org/

கப்பன் பார்க் – ஓர் அழகான காலைப் பொழுதில்….

மூங்கில் மரங்கள் சூழ்ந்த அழகிய கப்பன் பார்க்....

அதிகாலை வேளையில் கப்பன் பார்க் எப்படி இருக்கும்?. சென்று பார்க்கலாமே என்று தோன்றியது… காலை 6:30 மணிக்கு அங்கே ஆஜர். ரொம்ப சீக்கிரம் போகப் போகிறோம் என்று நினைத்து போன எனக்கு வெட்கம் தான் மிஞ்சியது. கப்பன் பார்க் நடைப்பயிற்ச்சியாளர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள், Shuttle விளையாடுபவர்கள் என களைக்கட்டி இருந்தது. அதில் சில பெரியவர்கள் அங்கு வசிக்கும் புறக்களுக்காக வீட்டிலிருந்தே தீனி கொண்டு வந்திருந்தனர். புறாக்கள் பறக்கும் அழகே தனி.

புறாக்களுக்கு தீனியிடும் பெரியவர்....

புறாக்களுக்கு தீனியிடும் பெரியவர்….


அதிகாலை வெயிலில் பூக்களும் மரங்களின் இலைகளும் அழகாக மின்னியதைக் காண 2 கண்கள் போதவில்லை.
Firangi paani...

Firangi paani…


காலை வெயிலில் ஜொலிக்கும் மரத்துளிர்கள்....

காலை வெயிலில் ஜொலிக்கும் மரத்துளிர்கள்….


அங்கே நான் கண்டு ரசித்த சில அழகான காட்சிகளை என்னுடைய Camera மூலம் பதிவு செய்ததை இங்கே உங்களுக்காக பகிறுகிறேன்.
Statue of Maharaja Chamarajendra Wodeyar.

Statue of Maharaja Chamarajendra Wodeyar.

Egret

Egret

புற்களுக்கான குடை - காளான்

புற்களுக்கான குடை – காளான்

கல்லிலே கலைவண்ணம் கண்டான்...(விநாயகர்)

கல்லிலே கலைவண்ணம் கண்டான்…(விநாயகர்)

கரையில் ஓய்வெடுக்கும் ஓடம் .....

கரையில் ஓய்வெடுக்கும் ஓடம் …..

கண்களுக்கு இதமான பூக்கள்...

கண்களுக்கு இதமான பூக்கள்…

Spider Lily

Spider Lily

காய்ந்த இலையும் ஒரு அழகே...

காய்ந்த இலையும் ஒரு அழகே…

ஓங்கி வளர்ந்திருக்கும் மரம்...

ஓங்கி வளர்ந்திருக்கும் மரம்…

plastics இல்லாத கப்பன் பார்க்-ஐ உருவாக்கும் முயற்சியில் குப்பைத்தொட்டி...

plastics இல்லாத கப்பன் பார்க்-ஐ உருவாக்கும் முயற்சியில் குப்பைத்தொட்டி…


என்னதான் குப்பைத் தொட்டிகள் எல்லாம் வைத்து பார்க்-ஐ சுத்தமாக வைத்திருக்க முயற்சித்தாலும் நமது மக்களின் கைவண்ணத்தைப் பாருங்கள்..
அமைதியான சூழலில் கப்பன்...

அமைதியான சூழலில் கப்பன்…

குப்பைகளுடன்.....

குப்பைகளுடன்…..

எப்பொழுது தான் நம் நாட்டிற்க்கு plastics – லிருந்து விடுதலையோ…

ராமேஸ்வரம் – எதிர்பாராத ஓர் அவசர பயணம்

வெளி பிரகாரம்....

இந்த முறை கோடை விடுமுறைக்கு மதுரை சென்ற பொழுது ராமேஸ்வரம் செல்வோம் என்று எதிர் பார்க்கவில்லை. பாலாஜி-யின் பெரியம்மா வீட்டுக்கு நலம் விசாரிக்க சென்ற பொழுது, பெரியம்மா மகன் வியாபார நிமித்தமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டுமென்று சொன்னவுடன் நானும் தொத்திக் கொண்டேன். அவருடன் அவருடைய மகளும் என்னுடன் மதி-யும் சேர்ந்து கொண்டனர்.

ரயிலில் செல்லலாம் என்று முடிவு செய்து காலை 5 மணிக்கே ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டோம். மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு திருப்பதி எக்ஸ்பிரஸ் ஒன்றும், 6:45 மணிக்கு பாசஞ்சர் ரயில் ஒன்றும் ராமேஸ்வரத்திற்கு செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் இயங்குகின்றன. எக்ஸ்பிரஸ்-இல் செல்லலாமென முடிவு செய்து பயணச்சீட்டு வாங்கிக் கொண்டோம்.

மதி பாம்பன் பிரிட்ஜ்-க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான். ரயில் பிரிட்ஜ் மேல் செல்லும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும், புது அனுபவமாகவும் இருந்தது மதி-க்கு.

பாம்பன் பாலம் துவங்கும் இடம்

பாம்பன் பாலம் துவங்கும் இடம்


பாம்பன் பாலத்தில்...

பாம்பன் பாலத்தில்…

பாம்பன் பாலத்தில்...

பாம்பன் பாலத்தில்…


பிரெஷ் மீன்கள் கடலில் இருந்து....

பிரெஷ் மீன்கள் கடலில் இருந்து….

ராமேஸ்வரம் சென்று இறங்கியவுடன் அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ-வும், குதிரை வண்டியும் இருந்தன. மதி அப்பொழுது தான் குதிரை வண்டியை பார்க்கிறான். அவனுடைய விருப்பத்தின் பேரில் குதிரை வண்டியேறி கோவிலுக்கு சென்றோம்.

மதி குதிரை வண்டியில் ....

மதி குதிரை வண்டியில் ….

பிரகாரங்களில் உள்ள தூண்களுக்கு கும்பாபிஷேகத்தை ஒட்டி வண்ணம் அடித்துக் கொண்டிருந்தனர். எனகென்னவோ அதன் பழமை, வண்ணங்களினால் மறைக்கப்பட்டு விட்டதாக ஒரு வருத்தம்.

வெளி பிரகாரம்.... என்னுடைய canon 10 - 22mm - ல்

வெளி பிரகாரம்…. என்னுடைய canon 10 – 22mm – ல்


வெளி பிரகாரம்...

வெளி பிரகாரம்….


வெளி பிரகாரம்....

வெளி பிரகாரம்….

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்...

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்…


பிரகாரத்தின் வேலைப்பாடுகள்...

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்…

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்...

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்…


வெளி பிரகாரத்தின் தூண்கள்.....

வெளி பிரகாரத்தின் தூண்கள்…..


பின்பு அங்கு கோவிலுக்குள் பிரகாரங்களை புகைப் படங்கள் எடுத்துகொண்டிருக்கும் போதே பாலாஜி-யின் பெரியம்மா மகன் தன் வேலைகளையும் முடித்துக்கொண்டு வந்திருந்தார்.

நல்ல வேளையாக உள் பிரகாரத்தை பெயிண்ட் அடிக்காமல் விட்டு வைத்திருந்தார்கள்.

உள் பிரகாரம்...

உள் பிரகாரம்…


சில candid புகைப்படங்கள்….
candid

candid

வியாபார பங்குதாரருடன்...(With Business Partner)

வியாபார பங்குதாரருடன்…(With Business Partner)

கடமையில் கண்ணாக...

கடமையில் கண்ணாக…

TV டவர்...

TV டவர்…


கோவில் கோபுரம்...

கோவில் கோபுரம்…

மாலையில்....

மாலையில்….

அனைத்தையும் ரசித்து விட்டு மாலை 4 மணிக்கு அதே ரயிலில் வீடு திரும்பினோம்.