என் வீட்டுத் தோட்டத்திலிருந்து…

IMG_6371copy
இந்த புகைப்படம் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

பாலாஜி-க்கு மல்லிகைகள் என்றாலே ஒரு தனி பிரியம். கோடைக்காலத்தில் மல்லிகைகள் நன்றாக மொட்டு விட்டு மலரத்தொடங்கிய வேளை. பாலாஜி business காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டியதாக இருந்தது. அவர் அங்கு சென்ற வேளையில் மல்லிகைகளை காண வேண்டுமென்று விருப்பம் தெரிவித்ததால், அவற்றை அழகாக புகைப்படம் எடுக்கலாமென்று முடிவெடுத்து கிளிக்கியது இந்த படம்.

வெறும் மல்லிகையை மட்டும் வைத்து படமெடுத்தால் அவ்வளவு நல்ல effect இருக்காது. அதனால், பாலாஜி-க்கு மிகவும் பிடித்தமான ரெட் கலரில் ஏதாவது சேர்க்கலாம் என்று நினைத்து செம்பருத்தியையும் அருகில் வைத்தேன். என்னிடம் தனிப்பட்ட Flash எதுவும் இல்லை. ஜன்னலில் இருந்து வரும் சூரிய ஒளியிலேயே படம் எடுக்கலாம் என்று நினைத்து ஜன்னல் அருகில் பூக்களை வைத்து படம் எடுத்தேன். அப்படி வைத்து படம் எடுக்கும்போது,செம்பருத்தியின் மேல் வெளிச்சம் அவ்வளவாக விழவில்லை. அதனால், ரெட் கலரிலேயே ஒரு மெழுகையும் பக்கத்தில் வைத்து எடுத்தேன்.

படம் எடுத்த பிறகு அதை பாலாஜி-க்கு அனுப்பி வைத்தேன். நேரில் பார்க்க முடியாததை படத்தில் பார்த்தவுடனே அவருக்கு ஏகப்பட்ட சந்தோசம். அவர் சந்தோஷப்பட்டதில் எனக்கும், நல்ல படத்தை எடுத்து பாலாஜி-க்கு அனுப்பிய திருப்தி.