மஞ்சள் லில்லி

எனது பட வரிசையில் இருக்கும் பூக்களில், லில்லிகள் அனைத்தும் என் வீட்டில் பூத்தவைகளே (அவைகள் தான்  அதிக பராமரிப்பு தேவைப்படாத செடிகள் 😀 ). இதில் வெள்ளை, இளஞ்சிவப்பு நிறங்களை அடுத்து மஞ்சள் நிற லில்லியையும் சேர்க்க விரும்பி ஏறி இறங்காத நர்சரிகள் இல்லை. கடைசியாக போன வருடம் லால்பாக் ல் அந்த செடி கிடைக்கவே மிகுந்த ஆசையோடு கொண்டு வந்து வீட்டில் வைத்தேன்.
IMG_0821copy1

Pink Lily

IMG_0921copy1

White Lily

IMG_5203copy1

Another Variety in Pink lily

பிரயாணத்தின் போது சிறு பிள்ளைகள், ரயில் எப்பொழுது வரும் என்று முதலிலும், ரயிலில் ஏறி அமர்ந்த பின் ரயில் எப்பொழுது கிளம்பும் எனவும்,  எதிர்பார்ப்பின் உச்சியில் இருப்பதைப்  போல, செடி கிடைக்கும் வரை “எப்பொழுது கிடைக்கும்” என்ற எதிர்பார்ப்பும், அது கிடைத்தவுடன் “எப்பொழுது பூக்கும்” என எதிர்பார்ப்பின் விளிம்பிற்கே கூட்டிச் சென்று விட்டன இந்த மஞ்சள் லில்லி செடி.  இதன்  சிறப்பம்சம் என்னவென்றால்,  மழை பெய்தால் மட்டுமே பூக்கள் பூக்கும் . ஆகவே கிட்டத்தட்ட 6, 7 மாதங்கள் காக்க வைத்து விட்டன. இதற்கு நடுவில் எங்கள் வீட்டு “சேட்டையின் சிகரமான” வெள்ளைப் பூனை கோடையின் சூடு தாங்காமல் குளிர்ச்சிக்காக பூந்தொட்டிகளில் ஓய்வெடுப்பது(சாப்பிட்டு ஓய்வெடுப்பது மட்டுமே அதன் வேலை, அது வேறு விஷயம்) சகஜம்.
IMG_3251copy1

Snowy – சேட்டையின் சிகரம்

இந்த செடி வந்தவுடன், அதில் தான் போய் ஓய்வெடுக்க வேண்டுமா அந்த பூனை!!. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் சமயத்தில் தான் சிங்கப்பூர் தோழி ஒருவர், தொட்டிகளில் உபயோகப்படுத்தாத tooth brush குத்தி வை என யோசனையை சொன்னாள்(சிங்கப்பூரில் பூனைகள் அதிகம்). அதன் படியே  brush களை செருகி வைத்தாயிற்று. அதை பார்த்த பாலாஜி “பார்த்து,  மஞ்சள் பூக்களுக்கு பதிலா brush வளர போகுது” என சிரிக்காமல் சொன்னவுடன், “எப்படி இப்படி!!! ?” என சிரித்துக் கொண்டேன்.

கடைசியாக, கடந்த சில நாட்களாக வருண பகவானின் தயவினால் 2 பூக்கள் பூத்து விட்டன. அந்த இரண்டு பூக்களையும் “படுத்தி”, சில படங்களையும் எடுத்தாகி விட்டது. இதோ உங்களுடன் அந்த படத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

IMG_5311copy1

சே…!!! ரெண்டு பூக்களுக்கு இவ்ளோ பெரிய build up ஆ !!!, என்ன பண்ண தோழி ஒருவர், “எங்க வீட்டில் எக்கச்சக்கமாக பூத்து விட்டதே, இன்னுமா உன் வீட்டில் பூக்கலை?”, என்ற கேள்வியில் ஆரம்பித்தது இந்த கட்டுரைக்கான யோசனை. நிறைய நாள் கழித்து என்னை எழுத வைத்ததற்காக, இந்த நேரத்தில கண்டிப்பா அந்த தோழிக்கு நன்றி சொல்லியே ஆகணும் நான்(சூர்யா voice ல் படிக்கவும் )….

பரதம்

கலையை ரசிக்காதவர்கள் யாரவது இருக்கிறார்களா என்ன!!!… அதிலும் நாட்டியம்!!… மற்றவர்களுக்கு எப்படியோ, ஆனால் எனக்கு, சிறுவயதில் இருந்தே நான் கற்றுக்கொள்ள நினைத்த கலைகளுள் ஒன்று. எல்லோருக்கும் எல்லாமும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைந்து விடுவதில்லை தான். பரதத்தை T.V யில் கண்டதுண்டு, ஆனால் நேரில் பார்க்கும் வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. தோழி சௌம்யா-வின் நாட்டிய நிகழ்ச்சி தான் நான் நேரில் பார்த்த முதல் நிகழ்ச்சி. நாட்டியத்தை ரசிப்பதினால் மட்டுமே அதை கேமரா-வில் பதிவு செய்யவும் என்னால் ஆர்வம் காண்பிக்க முடிகிறது என நான் நினைக்கிறேன்.

தோழி சௌம்யா

தோழி சௌம்யா

சௌம்யவுடன் சேர்ந்து, செப்டம்பர் மாதம் பெங்களூர் NGMA (National Gallery of Modern Art) -ல் நடந்த, ருக்மிணி விஜயகுமார் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். வீட்டிலிருந்தே சற்று வேகமாக கிளம்பி சீக்கிரமாக சென்றடைய வேண்டுமென்று முன்கூட்டியே பிளான் செய்து கிளம்பினோம். சரியான நேரத்தில் நாம் கிளம்பினாலும், இந்தியாவில் அப்படி எல்லாம் சென்றுவிட முடியுமா என்ன?. முன்தினம் பெய்த மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, முக்கால் மணி நேரத்தில் போக வேண்டிய இடத்திற்கு ஒன்றரை மணி நேரத்தில் போய் சேர்ந்தோம். போகும் வழி முழுவதும் , “ஆரம்பித்திருப்பார்களோ” என்ற பதற்றம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. என்னுடைய முகத்தைப் பார்த்தே புரிந்து கொண்ட சௌம்யா, “சீக்கிரம் போய்விடலாம்.. நிச்சயமாக உனக்கு நல்ல படங்கள் கிடைக்கும்”, என என்னை சமாதானப் படுத்திக் கொண்டே வந்தார். ஒரு வழியாக நாங்கள் அங்கு சென்றடைந்த நேரத்தில், ருக்மிணி அவர்கள் “புஷ்பாஞ்சலி” யை மட்டும் முடித்திருந்தார்.

ருக்மிணி விஜயகுமார்

ருக்மிணி விஜயகுமார்

அங்கு உள்ளே நுழைந்தவுடன் அவரின் நாட்டியத்தை பார்த்து சிறுது நேரம் கேமரா-வை வெளியில் எடுப்பதற்கு கூட மறந்து விட்டேன். எனக்காகவே சிலர் முன்வரிசையில் 2,3 சீட்டை விட்டு வைத்திருந்தனர் போலும். வேகவேகமாக அதில் சென்று அமர்ந்து கொண்டோம். நான் கேமரா-வின் கண்கள் வழியே ரசித்த அவருடைய நாட்டியம் இதோ உங்களுக்காகவும்.

ராமேஸ்வரம் – எதிர்பாராத ஓர் அவசர பயணம்

வெளி பிரகாரம்....

இந்த முறை கோடை விடுமுறைக்கு மதுரை சென்ற பொழுது ராமேஸ்வரம் செல்வோம் என்று எதிர் பார்க்கவில்லை. பாலாஜி-யின் பெரியம்மா வீட்டுக்கு நலம் விசாரிக்க சென்ற பொழுது, பெரியம்மா மகன் வியாபார நிமித்தமாக ராமேஸ்வரம் செல்ல வேண்டுமென்று சொன்னவுடன் நானும் தொத்திக் கொண்டேன். அவருடன் அவருடைய மகளும் என்னுடன் மதி-யும் சேர்ந்து கொண்டனர்.

ரயிலில் செல்லலாம் என்று முடிவு செய்து காலை 5 மணிக்கே ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டோம். மதுரையிலிருந்து காலை 6 மணிக்கு திருப்பதி எக்ஸ்பிரஸ் ஒன்றும், 6:45 மணிக்கு பாசஞ்சர் ரயில் ஒன்றும் ராமேஸ்வரத்திற்கு செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டும் இயங்குகின்றன. எக்ஸ்பிரஸ்-இல் செல்லலாமென முடிவு செய்து பயணச்சீட்டு வாங்கிக் கொண்டோம்.

மதி பாம்பன் பிரிட்ஜ்-க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான். ரயில் பிரிட்ஜ் மேல் செல்லும் பொழுது மனதிற்கு மிகவும் சந்தோஷமாகவும், புது அனுபவமாகவும் இருந்தது மதி-க்கு.

பாம்பன் பாலம் துவங்கும் இடம்

பாம்பன் பாலம் துவங்கும் இடம்


பாம்பன் பாலத்தில்...

பாம்பன் பாலத்தில்…

பாம்பன் பாலத்தில்...

பாம்பன் பாலத்தில்…


பிரெஷ் மீன்கள் கடலில் இருந்து....

பிரெஷ் மீன்கள் கடலில் இருந்து….

ராமேஸ்வரம் சென்று இறங்கியவுடன் அங்கிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோ-வும், குதிரை வண்டியும் இருந்தன. மதி அப்பொழுது தான் குதிரை வண்டியை பார்க்கிறான். அவனுடைய விருப்பத்தின் பேரில் குதிரை வண்டியேறி கோவிலுக்கு சென்றோம்.

மதி குதிரை வண்டியில் ....

மதி குதிரை வண்டியில் ….

பிரகாரங்களில் உள்ள தூண்களுக்கு கும்பாபிஷேகத்தை ஒட்டி வண்ணம் அடித்துக் கொண்டிருந்தனர். எனகென்னவோ அதன் பழமை, வண்ணங்களினால் மறைக்கப்பட்டு விட்டதாக ஒரு வருத்தம்.

வெளி பிரகாரம்.... என்னுடைய canon 10 - 22mm - ல்

வெளி பிரகாரம்…. என்னுடைய canon 10 – 22mm – ல்


வெளி பிரகாரம்...

வெளி பிரகாரம்….


வெளி பிரகாரம்....

வெளி பிரகாரம்….

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்...

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்…


பிரகாரத்தின் வேலைப்பாடுகள்...

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்…

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்...

பிரகாரத்தின் வேலைப்பாடுகள்…


வெளி பிரகாரத்தின் தூண்கள்.....

வெளி பிரகாரத்தின் தூண்கள்…..


பின்பு அங்கு கோவிலுக்குள் பிரகாரங்களை புகைப் படங்கள் எடுத்துகொண்டிருக்கும் போதே பாலாஜி-யின் பெரியம்மா மகன் தன் வேலைகளையும் முடித்துக்கொண்டு வந்திருந்தார்.

நல்ல வேளையாக உள் பிரகாரத்தை பெயிண்ட் அடிக்காமல் விட்டு வைத்திருந்தார்கள்.

உள் பிரகாரம்...

உள் பிரகாரம்…


சில candid புகைப்படங்கள்….
candid

candid

வியாபார பங்குதாரருடன்...(With Business Partner)

வியாபார பங்குதாரருடன்…(With Business Partner)

கடமையில் கண்ணாக...

கடமையில் கண்ணாக…

TV டவர்...

TV டவர்…


கோவில் கோபுரம்...

கோவில் கோபுரம்…

மாலையில்....

மாலையில்….

அனைத்தையும் ரசித்து விட்டு மாலை 4 மணிக்கு அதே ரயிலில் வீடு திரும்பினோம்.

என் வீட்டுத் தோட்டத்திலிருந்து…

IMG_6371copy
இந்த புகைப்படம் என் மனதிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

பாலாஜி-க்கு மல்லிகைகள் என்றாலே ஒரு தனி பிரியம். கோடைக்காலத்தில் மல்லிகைகள் நன்றாக மொட்டு விட்டு மலரத்தொடங்கிய வேளை. பாலாஜி business காரணமாக அமெரிக்கா செல்ல வேண்டியதாக இருந்தது. அவர் அங்கு சென்ற வேளையில் மல்லிகைகளை காண வேண்டுமென்று விருப்பம் தெரிவித்ததால், அவற்றை அழகாக புகைப்படம் எடுக்கலாமென்று முடிவெடுத்து கிளிக்கியது இந்த படம்.

வெறும் மல்லிகையை மட்டும் வைத்து படமெடுத்தால் அவ்வளவு நல்ல effect இருக்காது. அதனால், பாலாஜி-க்கு மிகவும் பிடித்தமான ரெட் கலரில் ஏதாவது சேர்க்கலாம் என்று நினைத்து செம்பருத்தியையும் அருகில் வைத்தேன். என்னிடம் தனிப்பட்ட Flash எதுவும் இல்லை. ஜன்னலில் இருந்து வரும் சூரிய ஒளியிலேயே படம் எடுக்கலாம் என்று நினைத்து ஜன்னல் அருகில் பூக்களை வைத்து படம் எடுத்தேன். அப்படி வைத்து படம் எடுக்கும்போது,செம்பருத்தியின் மேல் வெளிச்சம் அவ்வளவாக விழவில்லை. அதனால், ரெட் கலரிலேயே ஒரு மெழுகையும் பக்கத்தில் வைத்து எடுத்தேன்.

படம் எடுத்த பிறகு அதை பாலாஜி-க்கு அனுப்பி வைத்தேன். நேரில் பார்க்க முடியாததை படத்தில் பார்த்தவுடனே அவருக்கு ஏகப்பட்ட சந்தோசம். அவர் சந்தோஷப்பட்டதில் எனக்கும், நல்ல படத்தை எடுத்து பாலாஜி-க்கு அனுப்பிய திருப்தி.