Coorg பயணம் – தலைக் காவேரி மற்றும் Abbey நீர்வீழ்ச்சி

Brahmagiri hills

Coorg பயணத்தின் முதல் நாளாக Bylakuppe புத்த மடத்தை பற்றி எழுதி இருந்தேன். இரண்டாவது நாளில் பாகமண்டலா – தலைக் காவேரி மற்றும் Abbey நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.

பாகமண்டலா – தலைக் காவேரி

தலைக் காவேரி நாங்கள் தங்கி இருந்த Madikeri எனும் ஊரிலிருந்து 56 கி.மீ தொலைவில் இருந்தது. முதலில் தலைக் காவேரி சென்றுவிட்டு பின்பு பாகமண்டலா செல்லலாமென்று முடிவெடுத்து தலைக் காவேரி சென்றோம்.
காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டதினால் வழி முழுக்க பனி மூட்டமாகவே இருந்தது. பனிமூட்டத்தின் நடுவில் காப்பித் தோட்டமும், வானுயர்ந்த மரங்களில் படர்ந்திருந்த மிளகு கொடியும், நாம் சுவர்கத்தின் நடுவில் தான் செல்கிறோமோ என்றதொரு பிரமிப்பைக் கொடுத்தது. நேரம் செல்லச் செல்ல பசி மெதுவாக வயிற்றைக் கிள்ளவே, பாகமண்டலத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு தலைக் காவேரி சென்றடைந்தோம்.

பாகமண்டலா செல்லும் வழியில்.....

பாகமண்டலா செல்லும் வழியில்…..

அங்கும் அதே மாதிரியான வானிலையே. பனி மூட்டத்தின் நடுவில் காவேரி நதி ஆரம்பிக்கும் இடத்தைப் பார்க்கவே அற்புதமாக இருந்தது. இந்த இடம் கடல் மட்டதிற்கு மேல் 1276 மீ உயரத்தில் அமைந்திருகிறது. இங்கு காவேரி நதி ஓர் சிறு ஊற்றாக ஆரம்பித்து பின்பு நிலத்தடியில் ஓடி காவேரியாக உருவெடுகிறது. இந்த ஊற்று ஆரம்பிக்கும் இடத்தில், மக்கள் வழிபடுவதற்காக சிறு கோவிலும் உள்ளது. இந்த கோவில் காவேரி அம்மனுக்காக அர்பணிக்கப் பட்டிருகிறது. மக்கள் நாணயங்களை இங்கு இருக்கும் சிறு குளத்தில் போட்டு காவேரி அம்மனிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

Temple tank of Thalai kaveri..

Temple tank of Thalai kaveri..

 

Brahmagiri hills

Brahmagiri hills

தலைக் காவேரி, பிரம்மகிரி மலையிலிருந்து....

தலைக் காவேரி, பிரம்மகிரி மலையிலிருந்து….

பின்பு அங்கிருந்து கிளம்பி பாகமண்டலா வந்து அங்கிருக்கும் பாகண்டேஷ்வரா கோவிலுக்கு சென்றோம். இந்த கோவில் “Karavali” பாணியில் கட்டி இருகின்றனர். அதாவது கோவில் மேற்பாகம் கோபுரம் மாதிரி இல்லாமல் கூரை வடிவில் இருக்கின்றது. மேலும் இங்கு காவேரி நதியுடன் kannike மற்றும் புராண சிறப்பு வாய்ந்த சுஜ்யோதி நதியும் கலப்பதினால் “திரிவேணி சங்கமம்” என்றும் அழைக்கப்படுகிறது.

Bhagamandala Temple

Bhagamandala, Bhagandeshwara Temple

 

Karavali style of Architecture.

Karavali style of Architecture.

 

Outlet for Abishakam Water..

Outlet for Abishakam Water..

பாகமண்டலவிலிருந்து Madikeri வந்து மதிய சாப்பாட்டை முடித்துக் கொண்டு Abbey நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். அங்கு செல்வதற்கான சாலை மிகவும் குறுகலாக இருந்ததினாலும், மழை பெய்து கொண்டிருந்ததினாலும், நீர்வீழ்ச்சியை சென்றடைய சற்றே சிரமமாக இருந்தது.
அங்கு சென்றடைந்த பின்பு, Abbey-ன் அழகு, நாங்கள் கடந்து வந்த சிரமங்களை மறக்கச் செய்தது. நீர்வீழ்ச்சியின் எதிரில் ஓர் பாலம் இருக்கிறது. சாரல் அந்த பாலத்தையும் கடந்து குளிரூட்டியது. என் இரண்டாவது மகன்(5 வயது) அந்த சாரலைக் கண்டு சொன்ன கமெண்ட், “Wow!!!, falls-ல் சுடு தண்ணி எல்லாம் வருதே”.

Abbey falls

Abbey falls

அனைத்தையும் ரசித்து விட்டு நாங்கள் தங்கி இருந்த Home Stay சென்றடைந்தோம். அடுத்த நாள் Dubare – யானைகள் முகாமிற்கு சென்று அவைகளுடன் சிறுது நேரத்தை செலவழித்து விட்டு ஊர் நோக்கி கிளம்பினோம்.

Bylakuppe, தலைக்காவேரி, Abbey நீர்வீழ்ச்சி மற்றும் யானைகளின் முகாம் ஆகிய அனைத்தையும் எங்களை விட எங்கள் வீட்டு குழந்தைகள் மிகவும் ரசித்தனர். ஆகவே எங்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் மனதிலும் Coorg பயணம், நீங்கா இடம் பெற்றுவிட்டது.

Coorg பயணம் – Bylakuppe

Buddha Sakyamuni.

நீண்ட நாள் கனவு Coorg பயணம், சுதந்திர தினத்தன்று நிறைவேறியது. இரண்டு முறை போவதென்று முடிவெடுத்து கடைசி நேரத்தில் போகமுடியாமல் போன Coorg பயணம். ஆசை ஆசையாய் கிளம்பினோம். இங்கு சுற்றிப்பார்த்த இடங்களை எல்லாம் ஒரே பதிவில் பகிர முடியாததால் தனித் தனி பதிவாக கொடுத்துவிடலாமென்று நினைத்திருக்கிறேன். முதலில் நாங்கள் சென்றது Bylakuppe-வில் உள்ள Namdroling Monastry தங்க கோவில்.

திபெத்தியர்கள் இந்தியாவில் குடியேறும் பொழுது சிலர் Bylakuppe -விலும் குடிபெயர்ந்துள்ளனர். புத்த சமயத்தை பரப்புவதற்காக மைசூர் மாவட்டம், கர்நாடகா – வில் மிகப்பெரிய மடம் ஒன்று Penor Rinpoche என்பவரால் 1963 -ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த மடத்தில் 5000-திற்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் சந்நியாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மடத்தின் முழுப் பெயர் “Thegchog Namdrol Shedrub Dargyeling” சுருக்கமாக “Namdroling”.

 நுழைவு வாயில்...

நுழைவு வாயில்…



ஆரம்ப காலத்தில் இந்த மடத்தினுள்ளே இருந்த மூங்கிலால் கட்டப்பட சிறு கோவிலே 1999 செப்டம்பர் 24 – ல் “Padma Sambhava Buddhist Vihara” எனப்படும் தங்க கோவிலாக உருவெடுத்தது. இந்தக் கோவில் ஒரே நேரத்தில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் வழிபட ஏதுவாக கட்டப்பட்டுள்ளது.
Padma Sambhava Buddist Vihara - தங்க கோவிலின் நுழைவு வாயில்...

Padma Sambhava Buddist Vihara – தங்க கோவிலின் நுழைவு வாயில்…


இந்த கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் அங்கு நிலவியிருக்கும் அமைதி நம்மையும் தொற்றிக்கொள்கிறது. எதிரில் 60 அடி உயரம் கொண்ட 3 சிலைகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
கோவிலின் உள்ளே....

கோவிலின் உள்ளே….


நடுவில் இருப்பவர் Buddha Sakyamuni ( நமக்கெல்லாம் தெரிந்த கௌதம புத்தர்), அவருக்கு வலப்பக்கம் இருப்பவர் Padma Sambhava, மற்றும் இடப்பக்கம் இருப்பவர் Buddha Amitayus.

Buddha Sakyamuni

Buddha Sakyamuni

Buddha Sakyamuni.

Buddha Sakyamuni.


இதில் Padma Sambhava என்பவர் “இரண்டாவது புத்தர் ” என்று திபெத்தியர்களால் அழைக்கப்படுபவர். இவர் தான் புத்த சமயத்தை திபெத் மக்களிடம் பரப்பியவர்.Buddha Amitayus அரசராக இருந்து பௌத்த மதத்தை தழுவியவர். இவருடைய சிலையை நிருவியவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Padma Sambhava

Padma Sambhava

Buddha Amitayus

Buddha Amitayus

பின்பு அங்கிருக்கும் ஓவியங்கள் மற்றும் கலைநயம் மிக்க பொருட்களை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப மனமில்லாது கிளம்பினோம்…

Thanga Painting...

Thanga Painting…

Dibetian Thanga Paintings

Dibetian Thanga Paintings

Door Knockers...

Door Knockers…

வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் துறவிகள்.

வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் துறவிகள்.

 புத்த துறவிகள்.

புத்த துறவிகள்.

இடைவேளை நேரத்தில் புத்த துறவிகள்.

இடைவேளை நேரத்தில் புத்த துறவிகள்.

இடைவேளை நேரத்தில் அமைதியாக காட்சியளிக்கும் கோவில்.

இடைவேளை நேரத்தில் அமைதியாக காட்சியளிக்கும் கோவில்.

சிட்டுக் குருவிகள் அமைதியான இடங்களில் மட்டுமே வாழுமோ?

சிட்டுக் குருவிகள் அமைதியான இடங்களில் மட்டுமே வாழுமோ?

பெங்களூரு சுதந்திர தின மலர் கண்காட்சி…

Full view of house boat.

இந்த வருடத்தின் இரண்டாவது மலர்க் கண்காட்சி லால்பாக்-ல் ஆகஸ்ட் 7 -ம் தேதி துவங்கியது. இந்த வருடத்திய Main attraction – கிளாஸ் ஹவுஸ் – ல் வைக்கப்பட்டுள்ள படகு வீட்டின் மாதிரி. முழுவதும் ரோஜா பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படகு வீடு அருமை..

இந்த வருடம் Vertical garden எனப்படும் “செங்குத்து தோட்டம்” -மும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்களின் காரணமாக எல்லோரும் அடுக்கு மாடி கட்டிடத்தில் குடியேறுகின்றனர். அவர்களால் இடப்பற்றாக்குறை காரணமாக தோட்டம் வைத்துக்கொள்ள முடியாமல் போகிறது. அவர்கள் குறைந்த இடத்தில் தோட்டம் வைத்துகொள்ளும் விதமாக இருக்கிறது இந்த செங்குத்து தோட்டம்.

செங்குத்து தோட்டம்

செங்குத்து தோட்டம்


மலர்களின் அழகால் ஜொலிக்கும் Glass House...

மலர்களின் அழகால் ஜொலிக்கும் Glass House…

Full view of house boat.

Full view of house boat.

ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட படகு வீடு.

ரோஜாக்களால் அலங்கரிக்கப்பட்ட படகு வீடு.

மலர்களின் அணிவகுப்பு.

மலர்களின் அணிவகுப்பு.


மரத்தில்  தொங்கும் பிளாஸ்டிக் பூக்கள் - நகரமயமாக்கலின் எதிரொலியோ ?

மரத்தில் தொங்கும் பிளாஸ்டிக் பூக்கள் – நகரமயமாக்கலின் எதிரொலியோ ?


அங்கு எடுத்த படங்களில் சில உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

குழந்தையோடு குழந்தைகளாக.....

குழந்தையோடு குழந்தைகளாக…..

வெயில் சாயும் வேளையில் லால்பாக்.

வெயில் சாயும் வேளையில் லால்பாக்.