குழந்தைகளின் கொலு

அதென்ன “குழந்தைகளின் கொலு” என தலைப்பு என்று எண்ணத் தோன்றுகிறதா?.. பெரியவர்கள், முக்கியமாக பெண்கள் தங்கள் Creativity-ஐ கொலுகளின் மூலமாக வெளிப்படுத்துவதை பார்த்திருக்கிறோம். ஆனால் மதுரையில், குழந்தைகளும், நவராத்திரி 9 நாட்களும் வீதியில் கொலு வைப்பார்கள். அதில் அவர்கள் creativity- யால் நம் அனைவரையும் பிரமிக்க வைப்பார்கள்.

தண்டவாளத்தில் ரயில்....

தண்டவாளத்தில் ரயில்….

வீட்டின் அருகில், Chair, Dining Table ....

வீட்டின் அருகில், Chair, Dining Table ….

IMG_1767_CR2

பாலத்தில் வரிசையாக வாகனங்கள்....

பாலத்தில் வரிசையாக வாகனங்கள்….

City மற்றும் Forest-க்கு நடுவில் ரயில் தண்டவாளம்....

City மற்றும் Forest-க்கு நடுவில் ரயில் தண்டவாளம்….

கொலுவை அலங்கரிக்கும் குழந்தைகள்...

கொலுவை அலங்கரிக்கும் குழந்தைகள்…

வீடு கட்ட பயன்படுத்தும் ஆற்று மணலை வீதியில், தங்கள் வீட்டு வாசலின் அருகில் பரப்பி வைத்து, அதில் நம் வாழ்கை முறை பிரதிபலிக்கும் வகையில் பொம்மைகளை வைத்து அலங்கரிப்பார்கள். இப்படியாக 9 நாட்களும் வைத்து, தினமும் உண்டியலில் காசுகளை சேர்த்து, கடைசி நாளில் சுண்டல் செய்வர். அதை அவ்வீதி வழியாகச் செல்பவர்களுக்கு விநியோகித்துத் தாமும் உண்டு மகிழ்வர்.

சின்ன கொலுவுடன் குட்டீஸ்....

சின்ன கொலுவுடன் குட்டீஸ்….

வெண்ணையை திருடும் கிருஷ்ணனை கண்டிக்கும் யசோதை....

வெண்ணையை திருடும் கிருஷ்ணனை கண்டிக்கும் யசோதை….

இந்த முறையானது நான் சின்ன குழந்தையாக இருக்கும் காலத்தில் இருந்து வழக்கத்தில் உள்ளது. இவை கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் டிவி போன்ற சாதனங்கள் குழந்தைகளை ஆட்கொண்ட இந்த காலத்திலும் தொடர்வது மகிழ்ச்சியை தருகிறது…