ரம்ஜான் ஐ முன்னிட்டு…..

ரம்ஜான் நெருங்கி கொண்டிருப்பதால் பெங்களூரில் மசூதிகளின் அருகில் “ரம்ஜான் ஸ்பெஷல்” உணவுகள் விற்பனை துவங்கி விட்டது. குறிப்பாக சில வீதிகளில் விற்கும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். இதில் சிவாஜி நகரின் வீதியும் ஒன்று. சென்ற வாரம், அதையெல்லாம் முயற்சி செய்து பார்க்கலாம் என குடும்ப சகிதமாக கிளம்பி விட்டோம். எப்பொழுதும் போல் மூத்தவர்,” எனக்கு வேலை இருக்கு” என வீட்டில் இருந்து கொண்டதினால், சித்து-வுடன் நானும், பாலாஜி யும் சென்றோம். எப்பொழுதும் சித்து-வை எங்காவது கூட்டி சென்றால், “இங்கேயெல்லாம் எதுக்கு என்னை கூட்டிட்டு வரீங்க” என்பது தான் முதல் கேள்வியாக இருக்கும். பொதுவாக அப்பாவும், பையனும் கூட்டத்தை கண்டாலே அலறுவார்கள். இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என எனக்கு முன்கூட்டியே தெரியுமாதலால் லேசான பயத்துடனேயே அங்கு சென்றேன். முதல் கடையில் மாட்டு இறைச்சியில் “ரோல்” சாப்பிட்டவுடன், இருவர் கண்களிலும் ஒரு பிரகாசம். அதுவரை என் மனதில் இருந்த பயம், பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. அடுத்தடுத்த கடைகளில் மட்டன், சிக்கன் சாப்பிட, “சூப்பர்!! ரெண்டு பெரும் நன்றாக என்ஜாய் பண்றாங்க” என என் மனதில் ஓர் சந்தோசம்.

சிவாஜி நகர் போகும் பொழுது கேமரா இல்லாமல் அங்கு போவதா!!, என கேமரா வையும் எடுத்து கொண்டு தான் சென்றேன். இதோ அங்கு எடுத்த படங்களில் சில.

என்னடா படங்கள் ரொம்ப கம்மியாக இருக்கிறதே என நினைக்கிறீங்களா ?. பின்னே மட்டன், சிக்கன் எல்லாம் கண்முன்னாடி இருக்கும் பொழுது எப்படிங்க போட்டோ எடுக்கிறது :-).  ஏதோ சில படங்களை எடுத்து விட்டு, கடைசியில் சிவாஜி நகரின் புகழ்பெற்ற “லஸ்ஸி” யுடன் அன்றைய நாளை “சிறப்பாக” முடித்துக் கொண்டோம். சித்து ” ஏன் இவ்ளோ சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்க?” என கேட்கும் போது தான் தெரிந்தது, சாப்பாடு விஷயத்தில புள்ளை, அப்பா மாதிரியே என்று.

Advertisements