லில்லி

இன்று காலை சற்று சீக்கிரம் எழுந்து கொண்டதினால் நேரம் சற்று அதிகமாக கிடைத்தது. என்ன செய்வதென்று யோசிக்கையில், வீட்டு தோட்டத்தில் லில்லி மொட்டு அப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக விரிய ஆரம்பித்திருந்தது. என்னிடமிருந்த Canon 100mm Macro லென்ஸ், background அழகாக வட்ட வடிவமாக சுழல்வதைப் போன்ற தோற்றமளிக்கும் படங்களைக் கொடுக்கக் கூடிய Helios லென்ஸ் மற்றும் ரஷ்யா விலிருந்து வரவழைத்த Tair 11A 135mm லென்ஸ்களில் படமெடுக்கலாம் என்று அனைத்தையும் தூக்கிக்கொண்டு போய் படமெடுத்து தள்ளிவிட்டேன்.

இதோ இன்று எடுத்த படங்களிலிருந்து சில…

100 mm Macro வில் எடுத்த படங்கள்….

 

 

Helios லென்ஸில் எடுத்த படங்கள்…

முன்னொரு முறை இதே லில்லி பூத்திருக்கும் பொழுது எடுத்த படம் இது. இது மாதிரியான background இம்முறை கிடைக்கவில்லை. பூவிலிருந்து நாமிருக்கும் தூரம் மற்றும் பூவிலிருந்து background ன் தூரம் ஆகியவற்றை பொறுத்தே “Swirly Bokeh” ன் தரம் அமையும்.

இம்முறை எடுத்த படங்கள்…

 

Tair 11A 135mm -ல் எடுத்த படம்…

இந்த லென்ஸில் 100 mm போலவோ, Helios போலவோ பூவிற்கு அருகில் சென்று படமெடுக்க இயலாது. குறைந்தது 1.2m தூரத்திலிருந்து படமெடுக்க வேண்டும்.

ஒரு வழியாக காலை நேரத்தை பயனுள்ளதாக கழித்துவிட்டேன் என நினைத்துக் கொண்டிருக்கையில், “அம்மா பசிக்குது…” என கடைக்குட்டி, “காலையில் சமையல் வேலையும் செய்ய வேண்டும்” என்பதை ஞாபகப்படுத்தவே, வேகமாக அடுப்பறையில் நுழைந்து சட்னிக்காக வெங்காயம் நறுக்க ஆரம்பித்தேன்……..

Advertisements

மஞ்சள் லில்லி

எனது பட வரிசையில் இருக்கும் பூக்களில், லில்லிகள் அனைத்தும் என் வீட்டில் பூத்தவைகளே (அவைகள் தான்  அதிக பராமரிப்பு தேவைப்படாத செடிகள் 😀 ). இதில் வெள்ளை, இளஞ்சிவப்பு நிறங்களை அடுத்து மஞ்சள் நிற லில்லியையும் சேர்க்க விரும்பி ஏறி இறங்காத நர்சரிகள் இல்லை. கடைசியாக போன வருடம் லால்பாக் ல் அந்த செடி கிடைக்கவே மிகுந்த ஆசையோடு கொண்டு வந்து வீட்டில் வைத்தேன்.
IMG_0821copy1

Pink Lily

IMG_0921copy1

White Lily

IMG_5203copy1

Another Variety in Pink lily

பிரயாணத்தின் போது சிறு பிள்ளைகள், ரயில் எப்பொழுது வரும் என்று முதலிலும், ரயிலில் ஏறி அமர்ந்த பின் ரயில் எப்பொழுது கிளம்பும் எனவும்,  எதிர்பார்ப்பின் உச்சியில் இருப்பதைப்  போல, செடி கிடைக்கும் வரை “எப்பொழுது கிடைக்கும்” என்ற எதிர்பார்ப்பும், அது கிடைத்தவுடன் “எப்பொழுது பூக்கும்” என எதிர்பார்ப்பின் விளிம்பிற்கே கூட்டிச் சென்று விட்டன இந்த மஞ்சள் லில்லி செடி.  இதன்  சிறப்பம்சம் என்னவென்றால்,  மழை பெய்தால் மட்டுமே பூக்கள் பூக்கும் . ஆகவே கிட்டத்தட்ட 6, 7 மாதங்கள் காக்க வைத்து விட்டன. இதற்கு நடுவில் எங்கள் வீட்டு “சேட்டையின் சிகரமான” வெள்ளைப் பூனை கோடையின் சூடு தாங்காமல் குளிர்ச்சிக்காக பூந்தொட்டிகளில் ஓய்வெடுப்பது(சாப்பிட்டு ஓய்வெடுப்பது மட்டுமே அதன் வேலை, அது வேறு விஷயம்) சகஜம்.
IMG_3251copy1

Snowy – சேட்டையின் சிகரம்

இந்த செடி வந்தவுடன், அதில் தான் போய் ஓய்வெடுக்க வேண்டுமா அந்த பூனை!!. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் சமயத்தில் தான் சிங்கப்பூர் தோழி ஒருவர், தொட்டிகளில் உபயோகப்படுத்தாத tooth brush குத்தி வை என யோசனையை சொன்னாள்(சிங்கப்பூரில் பூனைகள் அதிகம்). அதன் படியே  brush களை செருகி வைத்தாயிற்று. அதை பார்த்த பாலாஜி “பார்த்து,  மஞ்சள் பூக்களுக்கு பதிலா brush வளர போகுது” என சிரிக்காமல் சொன்னவுடன், “எப்படி இப்படி!!! ?” என சிரித்துக் கொண்டேன்.

கடைசியாக, கடந்த சில நாட்களாக வருண பகவானின் தயவினால் 2 பூக்கள் பூத்து விட்டன. அந்த இரண்டு பூக்களையும் “படுத்தி”, சில படங்களையும் எடுத்தாகி விட்டது. இதோ உங்களுடன் அந்த படத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

IMG_5311copy1

சே…!!! ரெண்டு பூக்களுக்கு இவ்ளோ பெரிய build up ஆ !!!, என்ன பண்ண தோழி ஒருவர், “எங்க வீட்டில் எக்கச்சக்கமாக பூத்து விட்டதே, இன்னுமா உன் வீட்டில் பூக்கலை?”, என்ற கேள்வியில் ஆரம்பித்தது இந்த கட்டுரைக்கான யோசனை. நிறைய நாள் கழித்து என்னை எழுத வைத்ததற்காக, இந்த நேரத்தில கண்டிப்பா அந்த தோழிக்கு நன்றி சொல்லியே ஆகணும் நான்(சூர்யா voice ல் படிக்கவும் )….

ஆர்கிட் – களின் அணிவகுப்பு

லால்பாக் குடியரசு தின மலர்க் கண்காட்சியில் மற்ற மலர்களைப் போலவே ஆர்கிட் – களையும் அழகாக அடுக்கி வைத்திருந்தனர். அவற்றுள் என்னைக் கவர்ந்த ஆர்கிட் மலர்களை உங்களுடன் பகிறுகிறேன்.

லால் பாக் – குடியரசு தின மலர்க் கண்காட்சி.

இந்த முறை லால்பாக் மலர்க் கண்காட்சியில் என்னைக் கவர்ந்த மலர்களில் சில. முதலில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் சில பூக்கள்.

மலர்களின் அழகை ரசிக்க பெயர் தெரியவேண்டிய அவசியமில்லை. ஆதலால் பெயர்கள் இல்லாமலேயே படங்களை மட்டும் பதிவிடுகின்றேன். (பெயர்கள் சிலவற்றிற்கு தெரியாது, அது வேற விஷயம்).