இன்னுமொரு கங்கை!

மட்டூர் -ன் குப்பை கொட்டும் வளாகத்தினை படமெடுக்கச் சென்ற போது, முதலில் நண்பர் யஷ்வந்த் கூட்டிச் சென்றது, அரசாங்கத்தினால் நிறுவப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.  அந்நீரை சுத்தம் செய்வதற்கு பெரிய இயந்திரங்களைக் கொண்டு கட்டி இருப்பார்கள்,  ஊரை விட்டு தள்ளி வெகு தூரத்தில் இருக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு அங்கே சென்றோம்.  ஆனால் நாங்கள் சென்றதோ நன்கு பச்சை பசேல் என்று காட்சியளித்த, நெற்கதிர்கள் நிரம்பிய வயல்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த ஓர் சிறிய அறை!!. ஆம் அறை தான்!. சரி அதனுள் என்ன வைத்து சுத்திகரிப்பார்கள் என்ற ஆவலுடன் உள்ளே எட்டிப் பார்த்த எனக்கு ஆச்சரியமே மிஞ்சியது. அப்படி எதை பார்த்து ஆச்சரியம் எனக் கேட்கிறீர்களா?..  உள்ளே பெயருக்கு கூட ஒரு சுத்திகரிப்பு கருவியும் இல்லை.
—-
வெற்று அறையுடன் கூடிய சுத்திகரிப்பு நிலையம்.

வெற்று அறையுடன் கூடிய சுத்திகரிப்பு நிலையம்.

ஊர் மக்களின் கழிவுகளை எல்லாம் ஒன்று திரட்டி அங்கு ஓர் பைப் வழியாக கொண்டு வந்திருக்கிறார்கள். பின்பு அந்த அசுத்தமான தண்ணீரை மூன்று பெரிய பெரிய பாத்திகளில் செலுத்தி கடைசியில் “சிம்ஷா” நதியில் கலக்குமாறு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்தார்களோ தெரியவில்லை. மேலும் இம்மூன்று பாத்திகளைச் சுற்றி இருக்கும் நிலம், இந்த தண்ணீரால் சரியான விளைச்சலை கொடுக்கத் தவறுகிறது. வெறும் பெயருக்கு கட்டப்பட்டிருக்கும் இச்சுத்திகரிப்பு நிலையத்தினால் பல விவசாயிகள் பாதிக்கப்படிருக்கிறார்கள். அரசாங்கம், ஏதோ ஒரு சிறு தொகையை அவ்விவசாயிகளுக்கு அளித்து அவர்களின் வாயை மூடியும் இருக்கிறது.

முதலாம் பாத்தியில் நுழையும் கழிவு நீர்.

முதலாம் பாத்தியில் நுழையும் கழிவு நீர்.

முதஇரண்டாம் மற்றும் மூன்றாம் பாத்தி

இரண்டாம் மற்றும் மூன்றாம் பாத்தி

மூன்றாம் பாத்தியில் இருந்து சிம்ஷா நதிக்குள்.

மூன்றாம் பாத்தியில் இருந்து சிம்ஷா நதிக்குள்.

மற்றோர் வழியிலும்...

மற்றோர் வழியிலும்…

இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளில் ஒருவர்.

இத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளில் ஒருவர்.

சுத்திகரிப்பு நிலையத்தின் நிலை இப்படி என்றால், “சிம்ஷா” நதியின் நிலை அதை விட ஓர் படி மேல். அதன் கரையெங்கும் குப்பை மேடுகளாக காட்சியளிக்கிறது. இதோ இப்படி.
நதிக்கரை எங்கும் குப்பை...

நதிக்கரை எங்கும் குப்பை…

இந்த அசுத்த தண்ணீரை தன்னுள் வாங்கிக் கொள்ளும் சிம்ஷா நதி-ன் மணலை,  வீடு கட்டுமான பணிக்காக சுரண்டி எடுக்கிறார்கள்.

மணல் கொள்ளை

மணல் கொள்ளை

நாங்கள் சென்ற இடத்திலிருந்து 5 கி. மீ. தள்ளி, 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த, விஜயநகர மன்னர்கள் காலத்தைய சிவன் கோவில் ஒன்று உள்ளது. இதில் என்னவொரு வேடிக்கை என்றால், அக்கோவிலின் கடவுளை தரிசிக்க வரும் பக்தர்கள் இந்த நதியின் தண்ணீரையே புனிதத் தீர்த்தமாகக் கருதி, அதில் குளித்தும், குடித்தும் விட்டு செல்கின்றனர். மேலும் அக்கோவிலின் கடவுளையும் இந்நீரிலேயே சுத்தப் படுத்துகின்றனர். சிம்ஷா – வை பார்த்தவுடன்,  என் மனதில் தோன்றிய முதல் எண்ணம், ” இன்னுமொரு கங்கையா??” என்பது தான்.

இவ்வூரின் குப்பை வளாகத்தைப் பற்றிய புகைப்படத் தொகுப்புடன், இத்தொகுப்பையும் பதினைந்தாவது அகில இந்திய மக்களின் அறிவியல் மாநாடு (All India People’s  Science Congress) – ல் காட்சிப் படுத்தினேன்.  இத்தொகுப்புகளைக் கண்ட அனைவரிடமும் இப்படங்கள் பலமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என நினைக்கிறன். ஏனெனில், படங்களை பிரிண்ட் செய்யும் இடத்திலிருந்து, மாநாட்டில் காட்சிக்கு செல்லும் வரை பார்த்த அனைவரும் கேட்ட முதல் கேள்வி “இது உண்மையா?…, இப்படியெல்லாம் கூட நடக்கிறதா?… ” என்பதே.

Advertisements

2 thoughts on “இன்னுமொரு கங்கை!

  1. நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s