நாகரீகத்தின் மறுபக்கம்

பதினைந்தாவது அகில இந்திய மக்களின் அறிவியல் மாநாடு (All India People’s  Science Congress) பெங்களூரில் வரும் மே 22 முதல் 25 வரை நடக்க உள்ளது.  இதை ஒட்டி, பாரத அறிவியல் கழக (BGVS) -த்தின் களப்பணியாளர் ஒருவர், நகரமயமாக்கலின் பிரச்சனைகளை புகைப்படமெடுத்துத் தரக் கேட்டிருந்தார். அவருடைய வற்புறுத்துதலுக்கு இணங்க, பெங்களூரின் தற்போதைய பிரச்சனைகளுள் ஒன்றான “குப்பை” மேட்டை படமெடுக்கலாம் என நானும் பாலாஜியும் தேர்வு செய்தோம். எங்கு செல்லலாம் என யோசிக்கையில், நண்பரின் நண்பர் ஒருவர் “மட்டூர்” எனும் ஊரில் இத்தைகைய பிரச்னை இருப்பதாகத் தெரிவித்தார். ‘சரி, அங்கேயே செல்லலாம்’ என ஓர் சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டோம்.

மட்டூர் -இல் எடுத்த சில புகைப்படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த குப்பை மேட்டின் வளாகத்திலேயே இரண்டு குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதைப் பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. அக்குடும்பத்தின் குழந்தைகளும் அங்கேயே வசிக்கின்றன என்பது மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

அடிப்படை வசதிக்கு அந்த இடத்தில் வாய்ப்பே இல்லை. தண்ணீரும் உணவும் அவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கும் என்று எங்களால்  கற்பனை கூட செய்ய முடியவில்லை. ஏனெனில்,  இந்த குப்பை மேடு ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. அவர்களின் வீடு இதோ இப்படித் தான் இருந்தது.
IMG_9587copy1—-
IMG_9584copy1
தினமும் 2 அல்லது 3 முறை மாநகராட்சி வண்டி, மட்டூரிலிருந்து குப்பைகளை சேகரித்து இங்கு கொண்டு வந்து கொட்டுகிறது.
IMG_9612copy1
தாத்தாவுடன் விளையாட வேண்டிய வயதில், இப்படி குப்பைகளுக்கு நடுவே அவருக்கு உதவியாக வேலையில் இறங்கி விட்டாள்.
IMG_9600copy1—-
IMG_9593copy1
நமக்கு வேண்டாம் என நாம் தூக்கிப் போட்ட பொருட்களே அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் உடைமைகளாக மாறி விட்டிருந்தன.
IMG_9607_01copy1
சாலையில் தேங்கி நிற்கும் மழைத் தண்ணீரில் கால் வைக்கவே தயங்குகிறோம் நாம், ஆனால் அந்த தண்ணீரில் குளித்தும், அதையே குடிக்கும் குழந்தையைப் பார்த்தவுடன், நெஞ்சம் பதைத்தது.
IMG_9606copy1
அணுக்கழிவு (Nuclear Waste)களை அப்புறப்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தைப் பற்றி எல்லாம் சிந்திக்கும் நாம், சாதாரண வீட்டுக் கழிவுகளுக்கு ஓர் தீர்வை காண இயலாத நிலையில் இருக்கிறோம்.  நாகரீகத்தின் உபரி விளைவு இது தான் என்று அறியும் போது, நாம் உண்மையிலேயே நாகரீகமானவர்கள் தானா? என்ற கேள்வி எழுகிறது.
Advertisements

4 thoughts on “நாகரீகத்தின் மறுபக்கம்

  1. Muthu Kumar says:

    அருமையான மனதை பதிக்க வைக்கும் பதிவுகள். வாழ்த்துக்கள் 🙂

  2. Vijay murugan muthusamy says:

    nice photography with strong words. all the best.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s