சித்திரைத் திருவிழாவின் முகங்கள்….

சித்திரை திருவிழாவின் போது நான் பார்த்து ரசித்த வித்தியாசமான முகங்களில் சிலவற்றை தொகுத்திருக்கிறேன். ஒவ்வோர் முகத்தின் பின்னாலும் ஒவ்வோர் கதைகள்.

தினமும் இரவில் அம்மன் நகரை வலம் வரும் பொழுது, அம்மனுக்கு முன்னால், இவர்களைப் போன்ற குட்டி குட்டி அம்மன்கள் வலம் வரும் காட்சி மிகவும் அழகாய்த் தான் இருந்தது….
IMG_0771copy1

இராமனும் அனுமனும்…

குட்டிக் குட்டிக் கருப்பண்ண சாமிகள்….

கலர் மிட்டாய்க்காரர். சின்ன வயதில், நாக்கு சிவப்பதற்காகவே வாங்கி சாப்பிடுவோம். திருவிழா சமயத்தில் மட்டும் கிடைக்கும்…

அறுவாள் ஏந்திய கருப்பு….

இவருடைய நாமம் என்னை இவரை படம் எடுக்கச் செய்தது….

கோடை வெயிலை சமாளிக்க விசிறி விற்கும் பெண்மணி….

திருவிழா இவரிடத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கவில்லை போலும்… அமைதியாக தன் அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
IMG_0944copy1

இந்த திருவிழாவின் போது நான் தெரிந்து கொண்ட புது விஷயம் – கள்ளழகர் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வரும் பொழுது அவருக்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பக்தர்கள், அவரின் மேல் தண்ணீர் பீய்ச்சி அடிப்பார்கள் என்று தெரியும். ஆனால் அந்த தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள அவர்கள் பயன் படுத்துவது ஆட்டுத் தோலினால் ஆன தோல் பையைத்தான். வேண்டுமென்ற அளவில் பக்தர்கள் தோல் பையினை வாங்கிக்கொண்டு ஆட்டின் கால் பகுதியை தைத்து, அதன் கழுத்துப் பகுதியில் ஒரு tube-ஐ இணைத்து, அதில் சேமிக்கும் தண்ணீரைத்தான் கள்ளழகர் மேல் பீய்ச்சுகிறார்கள்… இங்கு படத்தில் இருக்கும் பெண் இம்மாதிரியான ஆட்டுத் தோலைத்தான் விற்கிறார்.

என்ன மக்காஸ்… திருவிழா என்று சொல்லி விட்டு சாமி படம் ஒன்று கூட இல்லையே என்று கேட்கிறீர்களா? சாமி படங்களை எடுப்பதை விட இம்மாதிரியான சாதாரண மக்கள் திருவிழா-வை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை படம் எடுக்கவே இம்முறை மதுரை சென்றிருந்தேன். ஓரளவிற்கு, என்னால் முடிந்தவரை பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு(பார்த்தும் விட்டு) கருத்துக்களை பகிருங்களேன்….

Advertisements

4 thoughts on “சித்திரைத் திருவிழாவின் முகங்கள்….

  1. இரசித்தேன். மிக அருமையான பகிர்வு, வனிலா.

  2. அற்புதமான படங்கள்…

  3. /* சாமி படங்களை எடுப்பதை விட இம்மாதிரியான சாதாரண மக்கள் திருவிழா-வை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை படம் எடுக்கவே */ – செம பாய்ண்ட்… அனைத்து புகைப்படங்களும் அருமை… அழகான கட்டுரை வடிவில் (Photo Essay) இருந்தது படிக்கும்/பார்க்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியது. எல்லாமே close -up புகைப்படங்களாக இருந்தது கொஞ்சம் அயற்சிதான். சில wide -angle புகைபடங்கள் இருந்திருந்தால் ஒரு நல்ல தொகுப்பாக இருந்திருக்கும்.

    தொடருங்கள் 🙂

    • vanilabalaji says:

      உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. //எல்லாமே close -up புகைப்படங்களாக இருந்தது கொஞ்சம் அயற்சிதான்.// திருவிழா-வில் நிறைய படங்கள் எடுத்திருந்தாலும், நான் ரசித்த சில முகங்களை மட்டுமே இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள நினைத்ததினால் இத்தனை close-up படங்கள். அங்கு எடுத்த மற்ற படங்களை இங்கு காணலாம்… https://www.flickr.com/photos/vanilabalaji/sets/72157644826324644/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s