முதல் சித்திரை திருவிழா அனுபவம்….

பிறந்ததிலிருந்து ஒரு முறை கூட சித்திரை திருவிழாவை முழுமையாக ஒரு நாள் கூட பார்த்ததில்லை. திருவிழாவை பார்க்க வேண்டுமென்ற ஆசையை விட அங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை நினைத்தால் வரும் பயமே அதிகமாக இருக்கும். இந்த முறை எப்படியாவது அங்கு கூடியிருக்கும் கூட்டத்தை என் படங்களின் மூலம் பதிவு செய்ய வேண்டுமென்று மதுரை-க்கு வந்துவிட்டேன். கூட்டத்தை மட்டுமல்லாது, அவர்களின் மனதில் தோன்றும் சந்தோஷம், திருவிழாவை அவர்கள் எதிர்கொள்ளும் விதம் அத்தனையும் பதிவிட எண்ணினேன். ஒரு படத்தை தவிர மற்ற படங்களை பெங்களூர் வந்த பிறகு அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்கிறேன். பிறகு ஏன் இந்த பதிவு என நினைக்கிறீர்களா?.

மதுரை திருவிழாவின் ஒரு பகுதியான மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த பிறகு கள்ளழகர், அழகர் கோவிலில் இருந்து புறப்படுவார். அதற்காக திங்கள் அன்று(12/05/2014) அழகர் கோவில் சென்றிருந்தேன். நான், என்னுடைய சித்தப்பா, அவர் மகன், மூவரும் மதியம் 3 மணிக்கே மதுரையிலிருந்து கிளம்பினோம். போகும் பொழுதே எப்படி திரும்பி வரப் போகிறோமோ என பயந்த படியே தான் சென்றோம். ஏனெனில் சென்ற வருடம் என் சித்தப்பாவின் அனுபவம், அங்கிருந்து திரும்பி வர பஸ் கிடைக்காமல் சிரமப்பட்டதினால், மிகக் கசப்பானதாக இருந்தது.

அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படும் கள்ளழகர்...

அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படும் கள்ளழகர்…

அழகர் அங்கிருந்து புறப்படுவதை ஓரளவிற்கு படம் எடுத்து முடித்த கையோடு வேகமாக புறப்பட்டு பஸ் நிற்குமிடத்திற்கு வந்தோம். திருவிழா காரணமாக எப்பொழுதும் பஸ் நிறுத்துமிடத்தில் பஸ் நிற்காமல், 1 கி.மீ. தள்ளியே நிற்கும்படி ஏற்பாடு செய்யப்படிருந்தது. ஆகவே 1 கி. மீ. நடந்து சென்று அங்கு காத்திருந்தோம். அழகர் எங்களை கடந்து வேகமாக மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தார். பஸ் வரும் வரும் என்று காத்திருந்தோம், 3 மணி நேரம் ஆகியும் “ம்ஹூம்” ஒரு பஸ் கூட வரவில்லை. இதற்கு நடுவில் மழை வேறு, எல்லோரையும் நனையவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. ரொம்ப நேரம் ஆகியும் பஸ் வராததால், சரி கொஞ்ச தூரம் நடந்து போனால் ஏதாவது ஆட்டோ கிடைக்கும் என்று, நடந்தோம், நடந்தோம் 3 கி. மீ. தூரம். அப்பொழுது 2 பஸ்கள் வரவே, அதில் ஒன்றில் மிகவும் சந்தோஷமாக(கூட்டத்தில் முட்டி மோதி) ஏறி உட்கார்ந்து கொண்டோம். அது மறுபடியும் அழகர் கோவிலுக்கு சென்று திரும்பியது(ஸ்…ஹப்பா..). திரும்பி வரும் சமயம் ஏற்கனவே அங்கு காத்துக் கொண்டிருந்த பக்தர்கள் ஏறிக் கொண்டபின் பஸ் மதுரையை நோக்கி பயணித்தது. அதில் ஏறிய பெண்கள் சொன்ன பின் தான் தெரிந்தது, அங்கு அவர்கள் செய்த சாலை மறியலே பஸ் அங்கு வந்ததிற்கான காரணம் என. சூப்பர் -ங்க நம்ம ஊர் பெண்கள்!!!… திருவிழா சமயத்தில் போதிய ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்தால் நன்றாக இருக்கும். எப்பொழுது தான் இதை எல்லாம் சரியாக செய்வார்களோ…

வீட்டிற்கு வர இரவு மணி 11 ஆகி விட்டிருந்தது. அழகர் மலையின் ரோட்டில் நிற்கும் சமயம் பஸ் கிடைக்கவில்லையே என்ற பயம் இருந்தாலும், என்னுடைய முதல் திருவிழா அனுபவமே எப்பொழுதும் மறக்கமுடியாத அளவிற்கு சூப்பர்-ஆக இருந்ததை நினைக்கும் பொழுது ஒரு வித சந்தோஷமே மிஞ்சியது. So மதியம் 3 மணியிலிருந்து இரவு 11 மணி வரை …திருவிழாவை சூப்பர்-ஆ கொண்டாடிவிட்டோம்….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s