சிறுவயதுத் தோழன்

எழுதுவதென்பது எவ்வளவு போதை தரக்கூடியது என்பதினை நான் எழுதாமல் விட்ட இந்த 2, 3 மாதங்களில் புரிந்தது(இதெல்லாம் உனக்கே கொஞ்சம் over – ஆ படலையா?). எழுதுவது மட்டும் அல்ல, புகைப்படங்கள் எடுப்பதும் அப்படித்தான் எனக்கு. 2 நாட்களாக கை துறுதுறுவென இருப்பதைப்பற்றி நேற்று தான் பாலாஜி -யிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். இரண்டும், 2-3 மாதங்களாக, மதியின் பரீட்சை, விடுமுறையின் காரணமாக மதுரை வந்தது ஆகியவற்றினால் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. ஆகவே முதலில் ஏதாவது எழுதிவிடலாம் என்று நினைத்த நேரத்தில், எதைப்பற்றி எழுதுவது என்பதும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அப்பொழுது சட்டென என் நினைவுக்கு வந்தது (இரவு 2:30 மணிக்கு), என் சிறுவயது தோழனாகிய “அனுமன்”.

நான் 1-வது அல்லது 2-வது படிக்கும் சமயத்தில் என் பக்கத்து வீட்டிலிருந்து நான் “சுட்ட” ஒரு மண் பொம்மை தான் “அனுமன்”. அப்பொழுது கம்ப்யூட்டரும், T.V. – யும் பிள்ளைகளை ஆட்கொள்ளாத காலம். நாங்கள் விளையாடவேண்டுமேன்றால் ஒன்று வீட்டில் ஏதாவது விளையாட்டுப் பொருட்களுடன், அல்லது தெருவில் பக்கத்து வீட்டு சிநேகிதர்களுடன் விளையாடுவோம். வீட்டில் அம்மாவை படுத்தி முடிந்து விட்டால், பக்கத்து வீட்டிற்கு சென்று விடுவோம். அப்பொழுது பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பட்டாசுத் தொழில் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் வீட்டிற்கு சென்று பட்டாசு செய்வதை பார்ப்பதே எங்களுடைய பொழுது போக்காக இருந்தது. பட்டாசு என்றால் அவர்கள் தயாரிப்பது தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசு மட்டுமல்ல. மதுரை “கோவில் நகரம்” என்பதினால் சாமியின் “நகர உலா”வும் அடிக்கடி இருக்கும். “நகர உலா” முக்கியமாக இரவு வேளைகளில் நடப்பதினால் சாமி வருவதற்கு முன்பு கலர்கலராக பட்டாசு வெடிப்பார்கள். இந்த மாதிரியான பட்டாசுகளும் “OUT ” எனும் ஒரு வகை பட்டாசும்(மதுரை வாசிகளுக்கு மட்டுமே பரிச்சயம் என நினைக்கிறேன்) என் பக்கத்து வீட்டார் தயாரித்து வந்தனர். சில சமயம் இராமயணக் கதையையும் வாண வேடிக்கையுடன் நடத்திக் காண்பிப்பதுண்டு. கதைகளில் அவர்கள் உபயோகப்படுத்துவதற்காக இராமன், சீதை, இலட்சுமணன், அனுமன் தலைகளை அவர்கள் வீட்டில் செய்து வைத்திருப்பார்கள். ஒருமுறை பட்டாசு செய்வதை வேடிக்கை பார்ப்பதற்காக சென்ற எனக்கு அந்த மண் பொம்மைகளில் அனுமன் மட்டும் மிகவும் பிடித்துப் போகவே, அவர்களை வற்புறுத்தி அதை என் வீட்டில் கொண்டு வந்து வைத்துக் கொண்டேன். அன்று முதல் என் நெருங்கிய தோழனாகி விட்டது அனுமன். பள்ளிக்கூடம் செல்லும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் என் கூடவே இருக்கும் அந்த பொம்மை. பக்கத்து வீட்டுக்காரர்கள் எவ்வளவோ கேட்டும் நான் அனுமனை அவர்களிடம் கொடுக்கவில்லை. எனக்கு அந்த பொம்மை மிகவும் பிடித்து போனதை அறிந்த அவர்கள் கதைக்காக வேறு பொம்மையை செய்து விட்டிருந்தார்கள். எனினும் அவ்வப்பொழுது என்னை சீண்டுவதற்காக “அனுமன் பொம்மை எங்கே?, எங்களிடம் கொடுத்து விடு” எனக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அவர்கள் வீட்டைக் காலி செய்து போய் பல வருடங்கள் ஆகி விட்டது. நானும் காலப்போக்கில் அனுமனை மறந்து தான் போயிருந்தேன். சில வருடங்களுக்கு முன்பு (எனக்கு கல்யாணம் ஆன பிறகு), அந்த வீட்டில் வேலை பார்த்த ஒருவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு “எங்கே அனுமன்?” எனக் கேட்டவுடன் தான் எனக்கும் ஞாபகம் வந்தது அனுமனைப் பற்றி. அவரிடம் எப்பொழுதும் போல் “கொண்டு வந்து தருகிறேன்” என ready made பதிலைக் கூறிவிட்டு, வீட்டில் வந்து பழைய பாத்திரங்கள் இருக்கும் இடமெங்கும் தேடினேன். இன்றும் என் கையில் சிக்கவில்லை அனுமன். எங்காவது பரண் மேல் இருக்கும் என்ற நம்பிக்கை மட்டும் எஞ்சியிருக்கிறது மனதில்.

Advertisements

6 thoughts on “சிறுவயதுத் தோழன்

  1. விரைவில் கிடைத்து விடும்…

  2. எங்கே அனுமன்?

    எங்களுக்கும் பார்க்க ஆவலாக இருக்கிறது:)!

  3. Latha says:

    nice!

  4. rani. says:

    superbb!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s