குண்டலஹள்ளி ஏரி.

ஞாயிறுக்கிழமை என்றாலே எனக்கு வீட்டில் இருப்பு கொள்வதில்லை. வாரம் முழுக்க வீட்டிலேயே இருப்பதினால், அன்று ஒரு நாளாவது எங்காவது செல்லவேண்டும். எங்கு செல்வதென யோசிக்கையில், கிட்டத்தட்ட 2 வருடங்களாக தங்கள் வீட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த பாலாஜி-இன் நண்பர்கள் நிதின் மற்றும் சௌஜன்யா தம்பதியரின் நினைவு வரவே அங்கு செல்லலாம் என தீர்மானித்தோம். சனிக்கிழமையே சௌஜன்யாவிற்கு தொலைபேசி மூலம் தெரிவித்தேன். அப்படி கூறும் பொழுது சௌஜன்யா, ” இங்கு வரும் பொழுது உன் கேமரா பேக்-ஐயும் எடுத்துக் கொண்டு வந்துவிடு” என்று சொல்லிவிட்டார். எதற்கென்று கேட்கும் பொழுது அங்கு ஏரி ஒன்று இருப்பதாகவும் அங்கு சென்று படம் எடுக்கலாமென்றும் சொல்லி இருந்தார். சரி என்று என்னுடைய கேமரா பேக் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். அவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு மதிய உணவை முடித்துக் கொண்டு ஏரிக்கு சென்றோம்.

ஏரிக்கு செல்லும் வழி...

ஏரிக்கு செல்லும் வழி…


ஏரியின் ஒரு பகுதி....

ஏரியின் ஒரு பகுதி….

ஏரி என்றவுடன் அங்கு நிறைய பறவைகளையும், சாயங்கால வேளையில் சூரிய அஸ்தமனத்தின் பொழுது கிடைக்கும் அழகானக் காட்சியையும் கற்பனை செய்து கொண்டு சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏரி-யின் முழு தோற்றம் இங்கே.

என்னடா இது அழகாய்த்தானே இருக்கிறது என்கிறீர்களா?.இது ஒரு பகுதியின் தோற்றம் தான். மேலும் இந்த படத்தை தூரத்தில் இருந்து எடுத்ததினால் ஏரியின் கரையில் இருக்கும் அசுத்தங்கள் தெரியவில்லை. ஏரியின் அருகில் வசிக்கும் மக்கள் பெரிய மென்பொருள் நிறுவனங்களின் கட்டிடங்களை கட்டும் கட்டிடத் தொழிலாளிகளே. அவர்களுக்கு சரியான வீடு, கழிப்பிடம் போன்ற அத்தியாவசிய வசதிகளே இருக்கவில்லை.

குளியலறை வசதி இல்லாததால் வீட்டுக்கு வெளியில் குளிக்கும் குடிசைவாசி.

குளியலறை வசதி இல்லாததால் வீட்டுக்கு வெளியில் குளிக்கும் குடிசைவாசி.


ஆகவே அவர்கள் ஏரிக்கரையிலேயே தான் தங்கள் துணிகளையும் பாத்திரங்களையும் கழுவிக் கொள்கின்றனர்.அவர்களின் வீடுகள் மற்றும் அங்கு வசிக்கும் குழந்தைகள், ஆகியோரின் படங்கள் இங்கே.

குறுகலான தெருக்களுடன் கூடிய வீடுகள்.

குறுகலான தெருக்களுடன் கூடிய வீடுகள்.


வளர்ப்பு பிராணியுடன்...

வளர்ப்பு பிராணியுடன்…


பிளாஸ்டிக் மற்றும் கழிவுகள் கலந்த தண்ணீரை குடிக்கும் ஆடு.

பிளாஸ்டிக் மற்றும் கழிவுகள் கலந்த தண்ணீரை குடிக்கும் ஆடு.


தன் செல்லப்பிராணி ஷீலா-வுடன்....

தன் செல்லப்பிராணி ஷீலா-வுடன்….

இங்கிருக்கும் மக்கள் தான் வறுமையின் காரணமாக ஏரிக்கரையிலேயே எல்லாம் செய்து கொள்கிறார்கள் என்றால், பெரிய பெரிய மென்பொருள் நிறுவனங்களுக்கு என்னவாயிற்று!!!, சரியான சாக்கடை செல்லும் வசதிகள் எல்லாம் இருந்தும், கட்டிடங்களின் கழிவுகளை ஏரியிலேயே கலக்கும் படி துளைகளை அமைத்துள்ளனர். இப்படி…

இவை எல்லாம் கலந்து ஏரி ஒரு வழி ஆகி விட்டிருந்தது. ஆங்காங்கே மிதக்கும் பிளாஸ்டிக் பைகள், சோப்பு தண்ணீர், மலம் கழித்து விட்டு அங்கேயே கழுவிக்கொள்ளும் சிறுவர்கள் – பார்க்கவே, ஏரியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்தது. இதற்கும் மேலாக அந்த தண்ணீரிலேயே குளித்தும் விடுகிறார்கள் மக்கள்.

ஏரியில் குளித்து விட்டு வரும் இளைஞர்.

ஏரியில் குளித்து விட்டு வரும் இளைஞர்.

சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம். இப்பொழுதே அதற்கான வேலைகளை துவக்கினால் ஒழிய பூமியை காப்பாற்ற முடியாது என்று தினம் தினம் விஞ்ஞானிகள் கதறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவை எதையும் பொருட்படுத்தாமல் நாம் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்திக்கொண்டு தான் இருக்கிறோம்.


இவற்றால் ஏற்படும் எதிர்த்தாக்கம் நம்மை மட்டுமல்லாது நம் குழந்தைகளையும் சேர்த்து தாக்கும் என்று எப்பொழுது புரிந்து விழித்துக் கொள்ளப்போகிறோமோ???

Advertisements

3 thoughts on “குண்டலஹள்ளி ஏரி.

 1. kamalesh M K says:

  When population keeps increasing, the City Infrastructure also needs to develop, other wise this will be the case.

  Kamalesh M K

 2. subbuthatha says:

  horrible environment indeed. Is there anyone in the Health Department of the Government reading or listening !!
  Not quite different from the Nesapakkam area when turning towards Ramapuram at chennai.
  God help these lesser mortals of his creation !!
  subbu thatha
  http://www.subbuthatha72.blogspot.in

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s