புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரி Flickr நண்பர்களை அங்கு சென்று சந்திக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் 6 மாத காலமாக ஓடிக்கொண்டே இருந்தது. வனிதா-வும் என்னுடன் வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவே, இருவரும் என் இரு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஒரு ஞாயிறு இரவில் KPN பஸ்ஸில் புறப்பட்டோம். திருச்சி-இல் இருக்கும் தோழி லக்ஷ்மியையும் அடம்பிடித்து ஒருவழியாக பாண்டிசேரிக்கு வரவழைத்தோம்.

நாங்கள் சென்றது 3 நாட்கள். அங்கிருக்கப் போகும் மூன்று நாட்களுமே நல்ல பயனுள்ளதாக போக்க வேண்டும் என நினைத்திருந்தேன். வெறும் PhotoWalk மட்டும் செல்லாமல், மற்ற நண்பர்களுடைய Composition style, ஒளியை அவர்கள் எப்படி கையாள்கிறார்கள், மற்றும் Post Processing – ல் அவர்களுடைய style எல்லாவற்றைப் பற்றியும் கலந்து பேச வேண்டுமென்ற எண்ணமும் இருந்தது. அதன்படி முதல் நாள், நண்பர் நித்தி ஆனந்த் அவர்களுடைய வீட்டில் சில படங்கள் எடுத்து நுணுக்கமான சில விஷயங்களை, உதாரணமாக லைட் மீட்டர் பற்றியும், manual focus பற்றியும் கலந்துரையாடினோம். பின்பு அவருடைய பழைய கேமரா பற்றியும் லென்ஸ் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் போதே நித்தி – யுடைய அம்மா சமையல் முடித்துவிட்டிருந்தார். அவர் அம்மாவின் சமையல், அடேங்கப்பா எவ்வளவு ருசி. அசைவ சமையலில், கோழி குழம்பு, மீன் வறுவல், மீன் குழம்பு, முட்டை என அமர்களப்படுத்திவிட்டார். சூப்பர்-ஆன சாப்பாட்டை முடித்துக் கொண்டு பீச் புறப்பட்டோம்.

பீச் ரோட்டையே Candid shots எடுத்து கலக்கி விட்டோம். ஒரு வழியாக அங்கு படங்கள் எடுத்து முடித்து விட்டு வீடு திரும்பி, அடுத்த நாள் காலை Auro Ville போகலாம் என்று முடிவெடுத்தோம். அங்கும் போதும் போதுமென்ற அளவுக்கு படமெடுத்து விட்டு மதியம் வீட்டிற்கு வந்தோம். இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், திருச்சியில் இருந்து காலை வந்து மாலை திரும்பி விட வேண்டுமென்று நினைத்திருந்த லக்ஷ்மியை எல்லாரும் சேர்ந்து பேசி ஒரு வழியாக அங்கேயே இருக்கச் செய்து விட்டோம். அதனாலேயே அவருடன் அடுத்த நாள் Auro Ville -க்கு செல்ல முடிந்தது.

வித்தியாசமான நண்பர்களை இந்த பயணத்தின் மூலம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததினால், என்னுடைய மற்ற பல பயணங்கள் போல் இல்லாமல் இந்த பயணம் வெகு வித்தியாசமாகவே அமைந்தது. கோவில் கட்டிடக்கலையின் மேல் எனக்கு அரும்பி இருக்கும் ஆர்வம் கண்டிப்பாக தோழி லக்ஷ்மியின் தாக்கமே. எவ்வளவு அருமையாகவும்,எளிமையாகவும் எனக்கு புரியும் படி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இன்னும் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருப்பதினால், ஒரு முறை திருச்சி சென்றுவர வேண்டுமென்றும் முடிவெடுத்துவிட்டேன். அவருடன் ஒரு கோவிலுக்கு சென்றால் இன்னும் நிறைய விஷயங்களை practical-ஆகக் கற்றுக் கொள்ளலாம் என்ற ஆர்வம் என்னுள் வேர்விடத் தொடங்கி இருக்கிறது.

நான் சந்தித்த மற்றுமொரு எளிமையான தோழர், கருணாகரன் எனும் கரன். திறமையான மனிதரும் கூட. பாண்டி பல்கலைக்கழகத்தில் Geology department-ல் Lab Assistant-ஆக வேலை செய்கிறார். Film Camera காலத்தைய லென்ஸ் எல்லாம் வீணாக்காமல் தற்போதைய கேமராவில் பொருத்தி அதை உபயோகப்படுத்துகிறார். அவர் உபயோகப்படுத்துவதெல்லாம் Fixed Focal Length உள்ள Prime லென்ஸ்களே. லென்ஸ்கள் எல்லாம் manual focus மட்டுமே செய்ய முடிகிறது. ஆனாலும் அதை அவ்வளவு லாவகமாகக் கையாள்கிறார்.வெற்றி கண்டிப்பாக எட்டிப்பிடித்து விடும் தூரத்தில் இருக்கிறது அவருக்கு.

பின்னர் இரண்டாம் நாள் ரபி, முஸ்தபா மற்றும் RJ Auro அவர்களை சந்தித்தோம். ரபி வீட்டில் இன்னும் சிறுது நேரம் இருந்திருக்கலாம் என்ற எண்ணமே மிஞ்சியது அவர் வீட்டில் இருந்து கிளம்பும் சமயம். முஸ்தபா-விடம் ஸ்ட்ரீட் போட்டோக்ராபி-யில் நிறைய சந்தேகங்கள் கேட்கவேண்டுமென்று எண்ணி இருந்தேன். மிகக்குறைந்த நேரமே அவர் வீட்டில் இருந்ததினால், அவ்வளவாக அவரிகளிடம் பேச முடியவில்லை. எல்லோரையும் முதல் முறை தான் சந்திக்கிறோம் என்ற எண்ணம் துளி கூட இல்லை மனதில்.

இன்னுமொரு முக்கியமான ஹீரோ-வைப் பற்றி சொல்லவில்லையே. அவர் தான் எங்கள் Gang-ன் Male மாடல்-ஆன விக்கி. நாங்கள் இரண்டு பெரும் இங்கிருந்து பாண்டி சென்று விட்டு திரும்பும் வரை எங்கள் கூடவே இருந்தது நித்தி மற்றும் விக்கி-யும் தான். எங்களை ஒரு பைசா கூட செலவழிக்க விடாமல் இருவரும் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். எங்களுக்காக அவர் போகவேண்டி இருந்த ஒரு விசே ஷத்தையும் ரத்து செய்து எங்கள் கூடவே இருந்தார்.

மொத்தத்தில் இந்த பாண்டி பயணம் இவ்வளவு சந்தோசமானதாகவும் முழுமையாகவும் இருந்ததற்கு இவர்கள் அனைவருமே காரணம். மிக்க நன்றி நட்புக்களே.

Advertisements

4 thoughts on “புதுச்சேரி

 1. Lakshmi says:

  Superb Writings Vanila அவர் அம்மாவின் சமையல், அடேங்கப்பா எவ்வளவு ருசி. அசைவ சமையலில், கோழி குழம்பு, மீன் வறுவல், மீன் குழம்பு, முட்டை என அமர்களப்படுத்திவிட்டார். சூப்பர்-ஆன சாப்பாட்டை முடித்துக் கொண்டு பீச் புறப்பட்டோம்…..Pin kurippu::Koskos nu oru puthu vagaiyana arisi arimuagaapaduthinar..
  Thanks for sharing this wonderful moments in 2013…..Nengalum vanithavin muyarchiye ungalai santhithathu….illai endral miss paniruppen…..

 2. Appaji says:

  பாண்டிச்சேரி வந்து, சென்று உள்ளீர்கள்….எங்கள் கடலூர் அருகில் தான் உள்ளது…அடுத்த முறை வரும்போது முன் கூட்டியே தெரியபடுத்தினால்
  ஆரோவில் நர்சரியில் அனுமதி வாங்கி உள் செல்லலாம்…நிறைய பூ செடிகளை தங்களது கேமராவில் பதிவு செய்து எடுத்து செல்லலாம்..வித்தியாசமான அனுபவமாய் இருக்கும்….!!

  தமிழும் இங்கிலிஷும் கலந்து கோர்வையாக எழுதுகிறீர்கள்….
  எழுத்து நடை நன்றாக உள்ளது…

  • vanilabalaji says:

   அடுத்த முறை புதுச்சேரி வரும் சமயம் கண்டிப்பாக உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். ஆம், ஆரோ சென்றிருக்கும் பொழுது அங்குள்ள நர்சரியில் உள்சென்று படம் எடுக்க அனுமதி தரவில்லை தான். சற்று வருத்தமாகத் தான் இருந்தது.

   முழுமையாக தமிழில் எழுதத் தான் நினைக்கிறன். என்னையும் மீறி சில வார்த்தைகள் ஆங்கிலத்திலும் வந்துவிடுகின்றன.

   தங்கள் கருத்துகளுக்கு நன்றி அப்பாஜி சார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s