சிவகங்கே

எல்லா பிள்ளைகளை போல, என் மூத்த மகனுக்கு கன்னடம் படிக்க அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை. அவனுடைய ஆர்வத்தை எப்படி அதிகரிப்பது என நானும், என் கணவரும் யோசிக்காத நாட்களே இல்லை. கன்னட பத்திரிக்கை வாங்கித்தருவதில் தொடங்கி, சந்தமாமா (கன்னடத்தின் அம்புலிமாமா) மற்றும் பல கதை புத்தகங்கள் வாங்கி கொடுத்தாகி விட்டது. ஆனாலும் அவனுடைய ஆர்வம் கன்னடத்தின் மேல் செல்லவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய பாடம் ஒன்று கன்னடத்தில் படித்திருக்கிறான். அது “சிவகங்கே” எனும் ஊரைப்பற்றியது. அங்கிருக்கும் பாதளகங்கை மற்றும் மலை உச்சியில் சிலையாக வடிக்கப்பட்ட நந்தியும் அவனுடைய கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அங்கு செல்ல வேண்டுமென முதலில் அவன் சொன்னவுடன், போகலாமா, வேண்டாமா என நாங்கள் சிறிது யோசித்தோம். கன்னட பாடத்தில் வருவதாக சொன்னவுடன், அவனுடைய ஆர்வத்தை வளர்க்க இதை விட நல்லதொரு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்து உடனே அங்கு செல்வதென்று முடிவெடுத்து கிளம்பினோம். நாங்கள் போகப்போகிறோம் என்று சொன்னவுடன் மதி(என் மூத்த மகன்)-யின் நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொண்டனர்.

சிவகங்கே – பெங்களூருவில் இருந்து 54 கீ. மீ. தொலைவில், தும்கூர் செல்லும் சாலையில் இருக்கிறது. வீட்டில் இருந்து கிளம்பி 2 மணி நேரத்தில் அங்கு சென்றடைந்தோம். வழியிலேயே காலைச் சாப்பாட்டை முடித்துக் கொண்டோம்.

நுழைவு வாயில்....

நுழைவு வாயில்….

கோவிலின் முன் தோற்றம்...

கோவிலின் முன் தோற்றம்…

மலை மேல் ஏறுவதற்கான படிகள்...

மலை மேல் ஏறுவதற்கான படிகள்…

முதல் தரிசனம் - ஞான முதல்வருடையது.....

முதல் தரிசனம் – ஞான முதல்வருடையது…..

கீழிருந்து மலை ஏறும் வழி முழுவதும் சின்ன சின்ன கோவில்கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று தான் பாதள கங்கை. இரண்டு பாறைகளுக்கு நடுவில் ஊற்று ஒன்று அமைதியாக வழிந்தோடுகிறது. அதையே பாதாள கங்கை என்று வழிபடுகின்றனர். இந்த ஊற்றை கங்கை என்று மக்கள் கருதுவதினால், சிவகங்கைக்கு “தக்ஷிண காசி” (தெற்கு காசி) என்ற பெயரும் உண்டு.

வீரபத்திரர்...

வீரபத்திரர்…

பாதாள கங்கை...

பாதாள கங்கை…

பாதாள கங்கை-யின் உட்புறம்...

பாதாள கங்கை-யின் உட்புறம்…

அங்கு எடுத்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மலையை செதுக்கி படிகள்....

மலையை செதுக்கி படிகள்….

படிகளில் ஏறும் பொழுது பிடித்துக் கொள்ள இரும்பு கைப்பிடி....

படிகளில் ஏறும் பொழுது பிடித்துக் கொள்ள இரும்பு கைப்பிடி….

பக்தர்கள் இளைப்பாற கலைநயம் மிக்க மண்டபம்...

பக்தர்கள் இளைப்பாற கலைநயம் மிக்க மண்டபம்…

பசவண்ணா...

பசவண்ணா…

சித்து-வை சமாளிக்க ட்ரக்...

சித்து-வை சமாளிக்க ட்ரக்…

மலையின் உச்சியில் ஒரே கல்லில் செதுக்கிய நந்தி ஒன்று உள்ளதென்று முன்னரே கூறினேன் இல்லையா, உச்சி வரை செல்ல என்னால் முடியாதென்பதால், என்னுடன் வந்திருந்த பிளிக்கர் தோழி வனிதா-வுடன் பாதியிலேயே சித்துவை வைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டோம். மலை உச்சி செல்லும் வழி மிகவும் செங்குத்தாகவும், அபாயகரமாகவும் இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாது, மதி மற்றும் அவனது நண்பர்களை, பாலாஜி கூட்டிச்சென்றார். அது மட்டும் இல்லாமல் சித்து எப்பொழுதெல்லாம் கால் வலியென்று சொன்னானோ, அப்போதெல்லாம் அவனை தன் தோளில் தூக்கிக் கொண்டு நடந்தார். குழந்தைகளுக்காக அவர் எடுத்துக்கொண்ட சிரமங்கள் பார்ப்பதற்கு நமக்கு கஷ்டமாக இருந்தாலும், அவர் மிகவும் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் உணர்ந்தார்.

பாலாஜியின் தோளில் சித்து....

பாலாஜியின் தோளில் சித்து….

இங்கு இருக்கும் கோவில்களையும், மலையின் அழகையும் ரசிக்கும் அதே நேரத்தில், இங்கு வரும் மக்களின் தாகத்தையும், பசியையும் போக்கும் விதமாக அங்கு இருக்கும் கடைகளில், அவர்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் காகிதங்கள் மலையின் அழகை கெடுப்பதில்லாமல், சுற்றுப் புறச்சூழலையும் மாசுபடுத்துகின்றன.

குப்பைத்தொட்டியையும் தாண்டி....

குப்பைத்தொட்டியையும் தாண்டி….

பிளாஸ்டிக்-இன் தீமைகள் புரியாத குரங்குகளின் கையில்....

பிளாஸ்டிக்-இன் தீமைகள் புரியாத குரங்குகளின் கையில்….

பசியின் பிடியில் இருக்கும் குரங்குகளுக்கு....

பசியின் பிடியில் இருக்கும் குரங்குகளுக்கு….


பிளாஸ்டிக் பற்றி பேசும் பொழுது இன்னொரு நிகழ்வும் ஞாபகத்திற்கு வருகின்றது. போன வாரம் பெங்களூருவில் “கடலைக்காய் பரிஷே” எனும் “கடலை சந்தை” ஒன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற அந்த சந்தையில் பிளாஸ்டிக் பைகளுக்கு மட்டும் விவசாயிகள் செலவழித்தது 1.7 லட்சம் ரூபாய். அந்த விவசாயிகளிடம், “பிளாஸ்டிக் பைகள் தர மாட்டோம்-ன்னு சொல்ல வேண்டியது தானே” எனக் கேட்டால், “நாங்கள் தர மாட்டோம்-ன்னு சொன்னா, எங்களிடம் கடலை வாங்காமல், பக்கத்து கடைகளில் வாங்கிகிறாங்க” என்று வருத்தப்பட்டனர். மேலும் பாலிதீன் பைகளுக்காக செலவு செய்த பணம் எங்கள் கையில் இருந்திருந்தால், நாங்கள் ஊருக்கு வந்து போகிற பஸ் செலவுக்கு உபயோகப்பட்டிருக்கும் எனவும் புலம்பினர். நம் கையில் உள்ள பணத்தை செலவு செய்து சுற்றுபுறசூழலை மாசுபடுத்துகிறோம். இதைத் தான் சொந்த செலவில் சூனியம் வச்சுகிறது-ன்றதா….

Advertisements

13 thoughts on “சிவகங்கே

 1. பகிர்ந்த படங்களும் பயண அனுபவமும் மிக அருமை, வனிலா.

 2. umavijay says:

  romba nallairruku vani,eppopoitu vande?it is not easy to climb i think.but it is nice for u i think.

 3. kamalesh says:

  Nice narration vanila…

 4. balaji says:

  Nice one Vanila..Good work and great effort to make child mind to get change

 5. Krishna Kochi says:

  Short content that explained all that you wanted to convey. Your writing is very compelling. Good job, Vanila.

  May need to add this place in my list to visit.

 6. Shammi says:

  Congrats!!

 7. Good Attempt Sister! Congrats! Keep it up!

 8. Appaji says:

  திருமதி. வனிலா பாலாஜி..க்கு …
  “சிவகங்கே” – யில் தாங்கள் publish செய்துள்ள,
  எட்டாவது படம்…மிக அருமையாக உள்ளது….

  (பிரபல….camera man ..திரு. அசோக் குமார்….வைக்கும்
  camera shots, angle போல் உள்ளது…)
  (தாங்களும் இன்றைய பிரபலம் தானே.. ஐயோ..ஐயோ…)

  1) தாங்கள் போட்டோ எடுக்கும் போதே…Lens Filter
  உபயோக படுத்துவீர்களா …

  2) அல்லது…photo எடுத்த பிறகு…System – த்தில்
  edit and touching work செய்வீர்களா…
  ________________________________________________
  சுற்றுபுறசூழலை மாசுபடுத்துகிறோம்>>>>>>>>>>
  வரும் கால சந்ததியினர் “பிளாஸ்டிக் அரிசி” யை ..
  துணி பைகளில் வாங்கி செல்வார்கள்..!!!
  ஏதோ நம் சந்ததியினருக்கு நம்மால் முடிந்தது…சரி தானே..
  _______________________________________________
  “சிவகங்கே” >>>>
  உடனே சென்று பார்க்க வேண்டும் போல் உள்ளது…
  _________________________________________________

  நன்றி…

  • vanilabalaji says:

   நன்றி அப்பாஜி சார்.

   அசோக் குமார் கூட எல்லாம் என்னை ஒப்பிடாதீர்கள். //(தாங்களும் இன்றைய பிரபலம் தானே.. ஐயோ..ஐயோ…)// இன்னும் பிரபலமாகவில்லை சார்.

   1. இல்லை. பில்ட்டர் எதுவும் உபயோகிப்பதில்லை.

   2. போட்டோ எடுத்த பிறகே எடிட்டிங் செய்வேன்.

   // ஏதோ நம் சந்ததியினருக்கு நம்மால் முடிந்தது…சரி தானே..// சரியாகச் சொன்னீர்கள். எவ்வளவு கெடுதல் இருந்தாலும், பிளாஸ்டிக்-ஐ விடுவேனா என்கிறார்கள், நம் சந்ததியினர்.

   கண்டிப்பாக சென்று பாருங்கள் அப்பாஜி சார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s