செம்பருத்தி

இந்த பதிவினை அலங்கரிக்கப் போவது, என் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த செம்பருத்தி பூக்கள். இன்றைக்கு புதிதாக ஒரு படம் செம்பருத்தியை வைத்து எடுத்தேன். அப்புறம் தான் என்னுடைய படத்தொகுப்புகளை கவனித்தேன். வீட்டில் வளர்ந்த செம்பருத்தியை வைத்து நிறைய படங்கள் எடுத்துவிட்டேன் என்பதனை. பார்க்கவே மிகவும் அழகாகவும், சந்தோஷமாகவும் இருந்தது, சிகப்பு செம்பருத்திகளை பார்க்கும் பொழுது. அதை அப்படியே ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.

நான் முதன்முதலில் செம்பருத்தியை வைத்து எடுத்த படம்...

நான் முதன்முதலில் செம்பருத்தியை வைத்து எடுத்த படம்…

என் வீட்டு மல்லிகைகள், செம்பருத்தியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்...

என் வீட்டு மல்லிகைகள், செம்பருத்தியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்…

இந்த செம்பருத்தி செடி என் வீட்டுக்கு வந்ததே ஒரு சுவாரசியமான விஷயம். என் இரண்டாவது மகனுக்கு எப்பொழுதும் மதிய சாப்பாடு வெளியில் சென்று தான் ஊட்ட வேண்டும். அன்றும் அப்படியே சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த பொழுது வீதியில் வண்டியில் வைத்து ஒருவர் செடிகளை விற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தார். என் மகன் அவரை பார்த்தவுடன் செடிகள் வாங்கலாம் என்று என்னிடம் அடம்பிடித்து, அவரை நிற்கச் செய்து விட்டான். முதலில் அவன் கேட்டது இந்த செம்பருத்தி செடியை தான். எனக்கு என்ன வருத்தம் என்றால், இதற்கு முன்பு நான் வாங்கிய செம்பருத்தி செடிகள் பூச்சி வந்து பட்டுப் போய்விட்டிருந்தன. “இந்த செடி தாங்குமா?” என்ற சந்தேகம். என் மகன் ஒரே மனதாக கண்டிப்பாக வேண்டும் என்று வாங்க வைத்தது இந்த செடி.

சூரிய ஒளியில் மின்னும் செம்பருத்தி....

சூரிய ஒளியில் மின்னும் செம்பருத்தி….

என் கணவர் விருப்பத்தின் பேரில் எடுத்த படம்...

என் கணவர் விருப்பத்தின் பேரில் எடுத்த படம்…

செம்பருத்தி Macro....

செம்பருத்தி Macro….

இன்றைக்கு புதிதாக எடுத்த படம்....

இன்றைக்கு புதிதாக எடுத்த படம்….

வாங்கும் பொழுது என் இடுப்பு வரை இருந்த இந்த செடி, இன்று 2 ஆள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது… இந்த அழகான படங்கள் என் மகன் அன்று அடம் பிடித்து எடுத்த முடிவினாலேயே சாத்தியமாயிற்று…

7 thoughts on “செம்பருத்தி

  1. அத்தனைப் படங்களும் கொள்ளை அழகு. செடியாக வீட்டுக்குள் நுழைந்த கதை சுவாரஸ்யம்.

  2. Appajiraman says:

    செம்பருத்தி புகை படங்கள் Detail…ஆக வந்து உள்ளது…பாராட்டுகள்…

    தங்களது கணவரின் விருப்பமாக எடுத்த புகை படம் அருமையாய் உள்ளது…

    முன்பே கூற வேண்டும் என இருந்தேன்…தாங்கள் ஒவ்வொரு புகை படத்திலும் …VB-My Third Eye என்ற Logo-வை என பதிவு செய்கிறீர்கள்…அது Class!

    செம்பருத்தி இதழ்களை பார்த்தீர்கள என்றால் சிறு குழந்தையின் உள்ளங்கை போல் …
    நிறைய நேரம் கையில் வைத்து கொண்டு இருக்க வேண்டும் போல் இருக்கும்…

    செம்பருத்தி மட்டும் நம் எல்லோர் இல்லத்திலும் இருக்கும் பூ செடி …ஆனால் சமீப வருடங்களில் தாங்கள் கூறுவது போல் என்ன மருந்து போட்டாலும் …பூச்சி…விழுந்து விடுகிறது….ப்ரெஷ் ஆக பார்ப்பதே அரிதாக உள்ளது!

    • vanilabalaji says:

      நன்றி அப்பாஜி சார்…
      Logo உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி, அது நானே design செய்தது…
      பூச்சி வருவதை தவிர்க்க முடிவதில்லை…:-(

  3. viki85in says:

    Very artful Vanila. How, every day things give us so much happiness. Nice work.

    Curious, is your name, வானிலா (vaanathin nilaa) or வெண்ணிலா (venmaiyaana nilaa) or வண்ணிலா (colorful nilaa).

Leave a reply to viki85in Cancel reply