அரிந்தம் முகர்ஜி -யுடனான புகைப்படக்கலை பயிலரங்கு.

arindham_mukherjee

“தளம்” அமைப்பைச் சேர்ந்த “Peevee ” மற்றும் “திலீப் பரம்” ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் புகைப்பட “Worshop ” – ல் போன ஞாயிறன்று கலந்து கொண்டேன். இதில் மக்களின் வாழ்க்கைமுறையை படம் பிடிப்பதில் பிரபலமானவர்களில் ஒருவரான “அரிந்தம் முகர்ஜி” மிகச்சிறப்பான முறையில் புகைப்படங்களை எடுப்பதைப் பற்றி கற்றுக் கொடுத்தார்.
அவரைப்பற்றியும், அவர் எடுத்த புகைப்படங்களையும் இங்கே காணலாம். http://arindam-mukherjee.photoshelter.com/#!/index அன்று நான் கற்ற சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எடுத்த எடுப்பிலேயே அரிந்தம் அவர்கள் எங்களிடம் வைத்த கேள்வி “உங்களுக்கெல்லாம் கதை சொல்லத் தெரியுமா?” என்பதே… எங்களின் மறக்க முடியாத சிறுவயது அனுபவங்களை எழுதச் சொல்லி அதை எல்லாம் கோர்த்து ஓர் கதையை பின்னச் சொன்னார். அதை மிகவும் சுவாரசியமாக – கதையின் தொடக்கம், அதில் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் பின்பு முடிவு என எழுதச் சொல்லி மேலும் கதையை மெருகேற்றினார். இதே பாணியில் படங்களும் இருக்க வேண்டும் என புரிய வைத்தார்.

புகைப்படங்கள் எடுக்கும் பொழுது அதை நாம் யாருக்காக எடுக்கிறோமோ, அவர்களுக்கு அப்படம் மிகவும் சுவாரசியமாக இருக்க வேண்டும். கண்கள் சில நிமிடங்கள் அப்படத்தை விட்டு அகலாதபடி நாம் நம் படத்தை “Compose ” செய்ய வேண்டும். “The Craft becomes Art, when it engages people”. ஆகையால் “Compose ” செய்வது மிகவும் முக்கியம் என்பதனை விளக்கினார்.

படங்களை வைத்து கதையை கோர்க்கும் பொழுது, முதலில் கதைக் களத்தையும், அந்த களத்தில் இருக்கும் மக்களையும், அவர் செய்யும் வேலைகள், அதில் இருக்கும் சந்தோஷம், கஷ்டம், கடைசியில் முடிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக படமெடுக்க வேண்டும். பின்பு அவற்றை வரிசையாக கோர்த்தால் அழகான கதையை தயார் செய்து விடலாம். இதில் தேவைப்பட்டால் சில வரிகளை இணைக்கலாம், இல்லையேல் படங்கள் மட்டுமே போதுமானது
என்பதனை அழகாக விவரித்தார்.

“மக்களை படமெடுக்கும் முன்பு அவர்களிடம் நன்றாக பழகினால் மட்டுமே மிகவும் எதார்த்தமான உணர்ச்சிகள் அவர்கள் முகத்தில் வெளிப்படும். மேலும் அவர்கள் எதிரில் நாம் இருக்கிறோம் என்ற உணர்வே அவர்களுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இது எப்பொழுது சாத்தியமாகும் என்றால் நாம் அவர்களிடத்தில் நன்றாக பேசி பழகினால் மட்டுமே முடியும். அப்பொழுது தான் அவர்கள் நம் மீது நம்பிக்கையுடன் அவர்களைப் பற்றியும், அவர்களது கதையையும் நம்மிடத்தில் பகிர்ந்து கொள்வர்.

மேலும் அவர்களை படமெடுக்கும் பொழுது, படங்களில் நாம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளத் தேவையான பொருட்களை உள்ளடக்கினால், புகைப்படம் மிகவும் தகவல் தருபவைகளாக அமையும்” என மக்களைப் படமெடுக்கும் விதத்தை பற்றிக் கூறினார்.

புகைப்படம் எடுக்கும் பொழுது கவனிக்க வேண்டிய சில விதிமுறைகள் பற்றியும், தேவைப்பட்டால் அதை மீறவும் செய்யலாம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

பின்பு “workshop” க்கு வந்திருந்தவர்களின் புகைப்படங்களை மிகவும் திறன்பட ஆய்வு செய்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி, நல்ல படங்களை எடுப்பதற்கான அறிவுரைகளையும் வழங்கி விடைபெற்றார்.

மொத்தத்தில் இந்த “workshop “ல் கலந்து கொண்டபின் புகைப்படக்கலையை பற்றிய அதிகமான தகவல்களை தெரிந்து கொண்டோம் என்கிற சந்தோஷம் மனது முழுக்க நிறைந்ததில் சந்தேகம் இல்லை. அதற்காக அரிந்தம் முகர்ஜி அவர்களுக்கு என் மனமுவந்த நன்றிகள். இதை சாத்தியமாக்கியதில் PeeVee மற்றும் திலீப் பரம் ஆகியோருக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s