கருப்புத் தங்கம்

குப்பைகளை வீடு வீடாக சென்று எடுத்து வருகின்றனர்.

பெங்களூர் ஐ.டி நிறுவங்களுக்கு மட்டும் பெயர் போனதல்ல. இன்னும் சில காலத்தில் குப்பைகளுக்கும் சேர்த்து பெயர் வாங்கும். குப்பைகளை அரசாங்கம் சரியாக கையாளவில்லை என்றே நம்மில் பலரும் கூறி வருகிறோம். ஆனால் குப்பைகளை நம் வீட்டில் நாம் சரியாக கையாளுகிறோமா?. இல்லை என்று தான் கூற வேண்டும். நாம் என்ன செய்ய முடியும் குப்பைகளை என்று கேட்கிறீர்களா?. ஒரு குப்பை கூட நம் வீட்டை விட்டு செல்லாதவண்ணம் செய்ய முடியும் என்று National Games Village – Koramangala வை சேர்ந்த மீரா கூறுகிறார்.

National Games Village-ல் Tungabadra Block -ஐ சேர்ந்தவர் மீரா. அவருடைய ஆலோசனைப்படி வீட்டிலேயே நாம் நமது குப்பைகளை சீர் செய்து உரமாக்கலாம். முதலில் நமது குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.

Daily Dump

Daily Dump


மீரா-வே தயாரித்த Daily Dump போன்ற மற்றுமொரு சாதனம்.

மீரா-வே தயாரித்த Daily Dump போன்ற மற்றுமொரு சாதனம்.


மக்கும் குப்பைகளை எல்லாம் Daily dump எனப்படும் மண் பாண்டங்களில் போட்டு வைக்க வேண்டும். மக்கும் குப்பை என்பது நம் வீட்டில் சமையற்கட்டில் விழும் குப்பைகளான காய்கறி தோல்கள் மற்றும் மீதம் ஆன சாப்பாடு அத்தனையும். நாளடைவில் Daily dump-ல் போட்ட குப்பைகள் மக்கி கருப்பு உரமாக மாறும். உரமாக மாறி விட்டது என்பதை, அந்த குப்பைகலில்ருந்து வரும் வாடையிலிருந்து கண்டுபிடிக்கலாம். நல்ல மண் வாடை வந்தால் குப்பைகள் உரமாகி விட்டன என்று அர்த்தம். இந்த உரத்தைத் தான் “கருப்புத் தங்கம்” என்று சொல்கின்றனர். மக்காத குப்பைகளில் விற்க முடிகிறவைகளை பக்கத்தில் உள்ள கடைகளில் விற்று விடலாம்.

அவர் தம் வீட்டில் மட்டுமல்லாமல் தான் குடியிருக்கும் Tungabadra Block முழுக்க இந்த மாதிரியான Zero Waste Mangement System எனப்படும் முறையில் குப்பைகளை வெளியில் செல்லாமல் தாங்களே கையாளுகின்றனர். அதற்கான வேலையில் அமர்த்தப்படும் வேலையாட்கள் அனைவருக்கும் மக்காத குப்பைகளை விற்று வரும் பணத்திலேயே சம்பளமும் கொடுக்கின்றனர்.

குப்பைகளை வீடு வீடாக சென்று எடுத்து வருகின்றனர்.

குப்பைகளை வீடு வீடாக சென்று எடுத்து வருகின்றனர்.


வேலையாட்கள் குப்பைகளை தனித் தனியாக பிரித்து எடுகின்றனர்.

வேலையாட்கள் குப்பைகளை தனித் தனியாக பிரித்து எடுகின்றனர்.


காய்ந்த இலைகள், மக்கும் குப்பைகளை உலர்வாக வைத்துக் கொள்ள...

காய்ந்த இலைகள், மக்கும் குப்பைகளை உலர்வாக வைத்துக் கொள்ள…


வீட்டில் செடிகளுக்கு உரமாக நாமே செய்யும் Compost....

வீட்டில் செடிகளுக்கு உரமாக நாமே செய்யும் Compost….

மீரா-வை போல் நாம் நம் தெரு முழுக்க செய்ய முடியவில்லை என்றாலும் கூட நம் வீட்டில் மட்டும் நாம் செயல் படுத்துவதைப்பற்றி யோசிக்கலாமே..
மீரா-வை பற்றி The Hindu பத்திரிக்கையில் http://www.thehindu.com/news/cities/bangalore/waste-segregation-hits-a-high-point-here/article2088217.ece

Daily dump பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://dailydump.org/

Advertisements

4 thoughts on “கருப்புத் தங்கம்

 1. nithiclicks says:

  Nice awareness…excellent wrtie up…..

 2. Nice work ma’am. But, Tamil?? Seriously??
  What about non locals like me??
  I’m a huge fan of yours ma’am.
  Love your photography.

  But, English please.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s